பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பூர்ணசந்திரோதயம்-1 பட்டபாட்டை நான் மறக்க முடியுமா? ஒரு நாளும் முடியாது. அப்படிப்பட்ட அன்பு நிறைந்த என் அருமை லீலாவதியை நான் இனியும் புறக்கணிப்பது சுத்த மிருகத்தனம். நான் தேடிக் கண்டு பிடிக்கும் சிரமம் இல்லாமல் அவளே வருகிறாள். அதுதான் என்னுடைய அதிர்ஷ்டம். நல்ல வேளையாக நான் இன்றையதினம் வீட்டிலேயே இருக்கும்படி நேர்ந்திருக்கிறது. ஒரு வேளை அவள் வந்து என்னோடு பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில், அந்தத் திருடன் வந்துவிடுவானோ என்னவோ, அப்படி வந்தால் என்ன? லீலாவதியை உள்ளே அனுப்பி விடுகிறேன்' என்று பலவாறு தமக்குள் எண்ணமிட்டவராய், இரண்டாவது கடிதத்தை எடுத்துப் படிக்கலானார். அது அவரது சமஸ்தானத்தைச் சேர்ந்த குடியானவன் ஒருவனால் நிலவரி சம்பந்தமாக எழுதப்பட்ட கடிதமாக இருந்தது. அதன்பிறகு படிக்கப்பட்ட நாலைந்து கடிதங்களும் இரண்டாவது கடிதத்தைப்போல சமஸ்தான சம்பந்தமானவையாக இருந்தன. அவர் அவைகளை எல்லாம் ஒருபுறமாக வைத்துவிட்டு இன்னொரு கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது. மகாகனம் பொருந்திய பெரியப் பாவின் சமூகத்துக்கு அடியேன் கலியாணராமன் வணக்கமாக எழுதிக்கொள்ளும் லிகிதம் உபய rேமம். உங்களுக்கு நான் இந்தக் கடிதத்தை எழுதி அனுப்பும் படியான அவசியம் ஏற்பட்டதைப் பற்றி என் மனம் நிரம் பவும் வருந்துகிறது. ஆனாலும், சில முகாந்திரங்களை முன் னிட்டு நான் அவசியம் நாளைய தினம் உங்களைக் கண்டு பேசவேண்டியதாக நேர்ந்துபோய் விட்டது. நாளை தினமாகிய புதன்கிழமை பகல் ஒரு மணிக்கு நான் அங்கே வந்து உங்களைப் பார்க்கலாம் என்று உறுதியாக நம்பியிருக்கிறேன். இங்ங்னம் பணிவுள்ள கலியாணராமன்