பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1.89 அவற்றின் விவரத்தை நாம் அறிந்து கொள்வது அநாவசிய மான விஷயம். - அவ்வாறு ஜெமீந்தார் தமது அன்றைய தபால்களை யெல்லாம் படித்து முடித்து எல்லாக் கடிதங்களையும் எடுத்து மேஜைக்குள் வைத்துவிட்டு லோபாவை விட்டு எழுந்து எதிர்ப்பக்கத்திலிருந்த ஜன்னலண்டை போய் நின்றுகொண்டு ராஜபாட்டையை நோக்கினார். தமது பங்களாவிற்கு அடுத்த பங்களாவின் எதிர்ப்பக்கத்தில் பாட்டை யோரமாக ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்து, கண்ணில்லாக் கபோதியாச்சே தாயி! இரண்டு கண்ணுமில்லாத குருடனைப் பார்த்து ஒரு தருமம் செய்யுங்க ஐயமாரே!” என்று மிகவும் பரிதாபகரமாகக் கூவிப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். ஜெமீந்தார் திடுக்கிட்டு மிகுந்த பிரமிப்பும் ஆச்சரியமும் அடைந்தவராய் அவனை உற்று நோக்கினார். அவன் உடம்பு முழுதும் அழுக்குப் படிந்த கந்தைத் துணிகளைத் தாறுமாறாகப் போட்டுக் கொண்டிருந்தான். அவனது தலைமயிர் முழுதும் அசங்கியமான சடைகளாக அவனது தலையில் நாற் புறங்க ளிலும் விகாரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் தனது கையில் ஒரு திருவோட்டை வைத்துக்கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அந்தத் திருவோட்டிலும், அவனுக்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த கந்தைத்துணியின் மேலும் அரிசியும் பைசாக்களும் கிடந்தன. அவனது கண்களைச் சுற்றிலும் வெள்ளையான ஏதோ மருந்து பூசப்பட்டிருந்ததன்றி, கண்கள் அரைப்பாகம் இமைகளால் மூடப்பட்டிருந்தன. அப்படிப்பட்ட பரிதாபகரமான கோலத் தோடு காணப் பட்ட அந்தப் பரதேசியைக் கண்ட ஜெமீந்தார் வியப் படைந்து மூக்கின் மீது விரலை வைத்து 'ஆகா தத்ரூபம் பிச்சைக்காரன் போலவே இருக்கிறதே! ஆகா இந்த இன்ஸ் பெக்டருடைய சாமர்த்தியமே சாமர்த்தியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த மாதிரி பிச்சைக் காரன் போல உரு மாறி உட்கார்ந்திருக்கிறார் என்று