பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பூர்ணசந்திரோதயம்-1 கண்டுபிடிக்க ஈசுவரனாலும் முடியாது” என்று தமக்குத்தானே நினைத்து ஆனந்தம் கொண்டு பூரிப்படைந்தவராய் நிற்க, அந்தச் சமயத்தில் ஒரு பெட்டிவண்டி வந்து அவரது மா ளிகையின் வாசலில் நின்றது. அந்த வண்டியில் வந்தது. யாரென்பதை அந்தமேன்மாடத்திலிருந்து அறிந்துகொள்ளக்கூட வில்லை ஆகையால், அவர் அவ்விடத்தைவிட்டுப் போய்த் தமது லோபாவின் மீது முன்போல உட்கார்ந்து கொண்டு வண்டியில் வந்த மனிதரது வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். அந்தப் பெட்டிவண்டி, அவரது மாளிகைக்குள் நெடுந்துாரம் சென்று அவ்விடத்தில் காணப்பட்ட தெற்றுவாச (திட்டிவாச) லண்டையில் நின்றது. அந்த வண்டிக்குள்ளிருந்து ஒரு மடந்தை கீழே இறங்கினாள். அவள் சுமார் இருபது வயதடைந்தவளா கவும், அற்புதமான அழகு வாய்ந்தவளாகவும் இருந்தாலும், அவளது முகம் மிகுந்த விசனத்தைக் காண்பித்தது. அவ்வாறு அவளது வதனம் துயரத்தைக் காண்பித்தமையால், அவளது தோற்றம் காண்போர் மனதை உருக்கிக் கலக்கக் கூடியதாக இருந்தது. அவ்விடத்திலிருந்த வாசல்காப் போன், அந்த ஸ்திரீ இன்னார் என்பதை உடனே அறிந்து மிகவும் மரியாதையாகவும் வணக்கமாகவும் குனிந்து ஒரு கும்பிடுபோட்டு உள்ளே அனுப்ப, கதவிற்கு உட்புறத்தில் ஆயத்தமாக நின்ற இன்னொரு வேலைக்காரன் அவளை வணங்கி வரவேற்று மேன்மாடத்திலுள்ள வெல் வெட்டு மாடத்திற்கு அழைத்துக் கொண்டுபோய், லீலாவதியம்மாள் வந்திருப்பதாக மருங்காபுரி ஜெமீந்தாரிடத்தில் தெரிவிக்க, அவர் மிகுந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொண்டவராய், உடனே எழுந்து புன்னகை தவழ்ந்த முகத்தோடு ஓடிவந்து அந்தப் பெண்மணி யைக் கண்டு 'வா, அம்மா! லீலாவதி!' என்று கரைகடந்த வாத்சல்யத்தோடு அவளை வரவேற்று உள்ளே அழைத்துக்