பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3 சிருஷ்டியே இந்த உலகத்தில் இல்லையென்று எல்லோரும் கூறி பிரமிக்கும் படியாக, அந்த அணங்குகள் இருவரும் இயற்கை எழில்பெற்ற இரண்டு நட்சத்திரச் சுடர்கள்போல் இருந்தனர். ஆனால், மூத்தவளான கமலத்திற்கும் இளையவளான ஷண்முக வடிவிற்கும், தேக அமைப்பிலும், குண விசேஷங்களிலும், நடத்தையிலும், அதிக தாரதம்மியம் இருந்து வந்தன. இருவர் களும் அதிதீrண்ய புத்தியுடைய வர்களானாலும் மூத்தவள் மகா தந்திரி; இளையவன் குழந்தை போன்ற கபடமற்ற மனமுடையவள். மூத்தவள் வேளவேளைக்கு நன்றாக உண்டு, அழகாக உடுத்தி, சொகுஸாக இருந்து, மெலுக்காகப் பொழுதைப் போக்குகிற சுகவாஸி. இளையவளோ உண்டிசுருங்குதல் பெண்டிர்க்கழகு என்ற வாக்கியத்திற்கு ஒரு உதாரணமாய், எவ்வளவு சொற்பமாக உண்ணக் கூடுமோ அவ்வளவு சொற்பமாக உண்டு வீட்டிலுள்ள சகலமான அலுவல்களையும் உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், தலைப்பொறுப்பாகச் செய்யும் உழைப்புக் குணமுடையவள். மூத்தவள் மாசுமறுவற்ற தேக அமைப்பையும், கட்டுமஸ்தான அங்கங்களையும், வசீகரமான முகம், மார்பு, இடை, நடை முதலிய சிறப்புகளையெல்லாம் சம்பூரணமாகப் பெற்று, நவராத்திரிக் கொலுவில் சிங்கார மண்டபத்தில் சித்திரப் பதுமைகளிடையில் கொலு வீற்றிருந்து அக்கிராசனம் வகிக்கத் தகுந்த ஒப்புயர்வற்ற பட்டத்துராணிபோல இருந்து, ரதி தேவியோ, இந்திரானியோ என்று சகலரும் மயங்கிக் கலங்கும்படி யாகவும், ஐம்புலன்களையும் அடக்கி அருந்தவம் புரியும் துறவிகளும் மோகலாகிரி கொண்டு நெடுமூச்செறியும் படியாகவும் இருந்தாள். ஷண்முகவடிவோஅடக்கம், ஒடுக்கம், வீட்டின் காரியங்களிலே கவனம் முதலிய உத்தம குணங்களெல்லாம் நிறைந்து, மகாலகடிமியோ, பார்வதி தேவியோ, கலைமகளோ என அவளைக் கண்டோர் எவரும் ஒருவித சந்தோஷமும் வியப்பும் கொண்டு, அவளிடத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைக்கத் தகுந்த