பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 199 ஜெமீந்தார்:- நீ என்னிடத்தில் வருவதைப் பற்றி வரும்போதே ஏன் சமாதானம் சொல்லிக் கொண்டு வரவேண்டும்? நீ என்னிடத்தில் வரக்கூடாதென்று நான் எப்போதாவது சொன்னதுண்டா? அல்லது, நீ வருவதைப் பற்றி நான் சங்கடப்பட்டேனா? ஒன்றுமில்லையே. அப்படி இருக்க, நீ சமாதானம் சொல்லவேண்டிய காரணமென்ன? கலியாணராமன்: இதுவரையில் வராதவன் இப்போது திடீரென்று வருவது உங்களுக்குப் புதுமையாகவும் வியப்பாகவும் இருக்கும் என்று நினைத்து நான் சமாதானம் சொன்னேன். அற்ப விஷயத்தைப்பற்றி வீண்வார்த்தை வளர்க்க எனக்கு விருப்பமில்லை.நான் வந்த காரணத்தை உடனே சொல்லிவிடுகிறேன். எனக்கு அவசரமாகக் கொஞ்சம் பணம் வேண்டியிருக்கிறது. நான்செட்டிமார்களிடத்தில் போய்க்கடன் வாங்கினால், அது உங்களுக்கு அதிருப்தியாக இருக்கும் என்று நினைத்து நான் உங்களிடத்திலேயே கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து இங்கே வந்தேன். ஜெமீந்தார்: சரியான வார்த்தை. உன் மனசில் உள்ளதை உள்ளபடி வெளியிட்டது எனக்கு நிரம் பவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், நீ எப்போதும் தரும நியாயம் எல்லாம் எடுத்துப் பேசுவாய்; ஒழுங்கான நெறியை விட்டுப் பிறழ மாட்டாய். அப்படிப்பட்ட சுத்தமான நடத்தையுள்ள மனிதனான உனக்கு, செட்டிமார்களிடத்தில் கடன் வாங்குவது தவறு என்பது தோன்றவில்லையா? கலியாணராமன்:- அது தவறு என்று நினைத்துத்தான், நான் செய்துகொண்ட பிரதிக்னையை மீறி மறுபடியும் நான் இங்கே வந்திருக்கிறேன். நீங்கள் பணம் கொடுக்காவிட்டால், கடன் வாங்கித்தான் ஆகவேண்டும். திருடக்கூடாது, பொய் சொல்லக் கூடாது. நமக்கு அவசியமான செலவுகளை நடத்தப் பணம் இல்லாவிட்டால் வட்டிக்குக் கடன் வாங்குவது தவறாகுமா? ஒரு நாளும் ஆகாது.