பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பூர்ணசந்திரோதயம்-1 ஜெமீந்தார்:- சரி; அப்பா இதோ தருகிறேன். வாங்கிக் கொண்டு போய் ச் சேர் - என்று கூறியவண்ணம் தமது ஆசனத்தை விட்டு எழுந்து இரும்புப் பெட்டியண்டை போய் இரண்டாயிரம் ரூபாய்க்கு நோட்டுகளை எண்ணி எடுத்துக் கொண்டு திரும்பி வந்து சேர்ந்தார். வந்தவர், கலியாணராமன், ரோஜாப் புஷ்பத் தொட்டியில் பூச்செண்டின் மறைவில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பிஸ் டல்களில் ஒன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு மிகுந்த வியப்பும் முனிவும் அடைந்தவராய் குரூரமாக அவனை நோக்கி, 'அப்பா கலியாணராமா! உன்னுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் மிகவும் கண்ணியமாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன. நீ செய்யும் காரியத்தைப் பார்த்தால் விளையாட்டுப் பிள்ளையின் அசட்டுக் காரியமாக இருக்கிறதே! நான் இங்கே இருந்த வரையில் மிகவும் பெருந்தன்மையாகப் பேசினாய்; நான் இவ்விடத்தைவிட்டுப் போனவுடன் இங்கே என்னென்ன சாமான்கள் இருக்கின்றன என்று சோதனை போட ஆரம்பித்துவிட்டாயே! கலியாணராமன்: (மிகவும் கிலேசமடைந்து) பெரியப்பா! கோபிக்க வேண்டாம். எனக்கு ரோஜாப் புஷ்பத்தைக் கண்டால், ஆசை அதிகம் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். எனக்குப் பக்கத்தில் அழகாகக் கட்டிவைக்கப்பட்டிருந்த இந்த செண்டைப் பார்த்தவுடனே, அதை எடுத்து மோந்து பார்க்க வேண்டும் என்று ஒர் ஆசை உண்டாயிற்று. அதை எடுத்தேன். அதன் கீழே இந்தப் பிஸ்டல் இருந்தது. இது ஏதாவது வேடிக்கைப் பொருளாக இருக்குமோ என்ற எண்ணத்தோடு இதை எடுத்துப் பார்த்தேன். அதற்குள் நீங்கள் வந்தீர்கள். அவ்வளவே நடந்தது. நான் அந்தப் புஷ்பச் செண்டை எடுத்தது என் மேல் குற்றந்தான். மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேறே நவரத்னக் குவியலை இங்கே போட்டிருந்தால் கூட, நான் அதைக் கண்ணாலும் பார்த்திருக்க மாட்டேன் - என்றான்.