பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பூர்ணசந்திரோதயம்-1 குடும்பஸ்திரீயாக இருந்தாள். வேடிக்கையாகவும், ஆசியமாக வும், உல்லாசமாகவும் பேசிக்கொண்டிருக்க யாராவது மனிதர் அகப்பட்டுவிட்டால், மூத்தவள் மூன்று தினங்களானாலும் ஊணுறக்கமின்றி அவர்களோடு பேசிச் சிரித்துக் கொண்டி ருப்பாள். இளையவளோ மிருதுபாஷிணி, அநாவசியமான வார்த்தைகளைப் பேசினால் வாய் முத்து சிந்திவிடுமென எண்ணுகிறாளோவெனமற்றவர் நினைக்கும்படியாக, ஏதேனும் அவசியமான விஷயங்களை மாத்திரம் பேசுவாள்; மற்ற வேளைகளில், வீட்டின் அலுவல்களைச் செய்வதிலோ, அல்லது, நல்ல புண்ணிய சரிதங்களைப் படிப்பதிலோ அல்லது, தனது அத்தை அக்காள் முதலியோருக்கு ஆகவேண்டிய குற்றே வல்களைச் செய்வதிலோ தனது கவனத்தை நாள் முழுதும் செலுத்திக் கொண்டிருப்பாள். தன் மனது நினைத்த காரியத்தை மற்றவர் நிறைவேற்றியே தீரவேண்டுமென்ற ஒரு பிடிவாதகுணம் கமலத்தினிடத்தில் இருந்துவந்தது. ஷண்முக வடிவோ, மூத்தோர் சொல்லும் வார்த்தையை அமிர்தமாக மதித்து அவர்களுக்கு அடங்கி அவர்களது பிரியப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற உத்தமஸ்திரீயின் லக்ஷணம் பூர்த்தியாகப் பெற்றிருந்தாள். இவ்விதமாக அந்த இரண்டு பெண்மணிகளின் குணாதிசயங் களின் தாரதம்மியம் இருந்துவந்ததானாலும், அவர்களிருவரும் ஒருவர் மீதொருவர் கரைகடந்த பிரியமும், வாஞ்சையும் வைத்தவர்களாய் இரண்டுடலும் ஒருயிரும் போல இருந்ததன்றி, தாயைக்காட்டிலும் பன்மடங்கு அதிக அன்பாகத் தங்களைக் காப்பாற்றிவந்த அத்தையிடத்தில் மட்டுக்கடங்காத மரியாதை யும் பயபக்தியும் வைத்து விருத்தாப்பிய தசையிலிருந்த அந்த அம்மாளைப் பேணிப் பாராட்டி வந்தனர். அவ்வாறு, அந்த எளிய குடும்பத்தினர் வாழ்க்கை நடத்தி வந்த காலத்தில், அவர்களுக்கு மகாவிபரீதமான ஒரு பொல்லாங்கு சம்பவித்தது. அந்தப் பொல்லாங்கு, எவரும்