பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 203 காட்டி, 'எஜமானுடைய விஷயத்தில் நான் நிரம்பவும் அபராதி யாகிவிட்டேன்; தங்களுக்கு அநேகம் இடங்களுக்குப் போகும் படியான எத்தனையோ ஜோலிகள் இருக்கும்; அவைகளையெல்லாம் நான் கெடுத்தது அன்றி, எனக்காக காத்திருக்கும்படியும் செய்துவிட்டேன். தங்களுக்கும் எனக்கும் சிநேகம் ஏற்பட்ட இந்த இருபது வருஷ காலத்தில் நான் தங்கள் விஷயத்தில் இப்படிப்பட்ட தவறுகளை லக்ஷக் கணக்கில் செய்திருப்பேன். அத்தனை தவறுகளையும் பொறுத்துக் கொண்டு எப்போதும் ஒரே மாதிரியாக இந்த ஏழையைக் காப்பாற்றிவரும் பெருவள்ளலான தாங்கள் இந்த ஒரு தவறையும் மன்னித்துக் கொள்ளவேண்டும்” என்று மிகவும் நயமாகவும் தேன் ஒழுகும்படியாகவும் இனிமையாகக் கூறி, அவர் இருந்த லோபாவின் மீது மரியாதையாக ஒதுங்கி உட்கார்ந்து கொண்டாள். அவளது இனிய வசனத்தைக்கேட்ட ஜெமீந்தார் நிரம்பவும் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தவராய் அவளைப் பார்த்து மனங் குளிர்ந்து நகைத்து, 'என்ன அம் மணிபாயீ நீ கூட எனக்கு உபசார வார்த்தை சொல்ல ஆரம்பித்து விட்டாயே! நீயும் நானும் இருந்து வந்த அன்னியோன்னிய சிநேகத்துக்கு நான் இதைக் கூடச் செய்யாவிட்டால் உனக்கு நான் வேறே எதைத்தான் செய்யப் போகிறேன். அதுபோகட்டும். எனக்கு ஒரு விஷயந்தான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் யெளவன பருவத்தில் எவ்வளவோ அழகாக இருந்தேன். அப்போது என்னைக் கண்டு ஆசைப்படாத ஸ்திரீகளே இல்லை. என்னுடைய பாலிய பருவம் வெகு சீக்கிரமாக ஒடிப்போய் விட்டது; நான் இப்போது குடுகுடு கிழவனைப் போல இருக்கிறேன். என்னுடைய பழைய அழகெல்லாம் எங்கேயோ போய்விட்டது. நீ மாத்திரம் எப்போதும் யெளவனப் பெண்ணாகவே இருக்கிறாயே! நீ ஒருவேளை தெய்வ லோகத்திலிருந்து தேவாமிருதம் வரவழைத்துச் சாப்பிட்டாயா? உன்னுடைய பதினாறாவது வயதில், நான்