பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பூர்ணசந்திரோதயம்-1 அதற்குள் அம்மணிபாயி எழுந்து அந்த இடத்திலிருந்த விலை உயர்ந்த விநோதப் பொருட்களையும் பூத் தொட்டி களிலிருந்த பூக்களையும் ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஜெமீந்தார் திரும்பி வந்தவுடனே அவள்மிகுந்த குதுகலமும் ஆனந்தமும் அடைந்தவளாய், 'நான் நம்முடைய இளவரச ருடைய அந்தரங்க மணிமாடத்துக்குள்கூட ஒருதரம் போய்ப் பார்த்திருக்கிறேன். அதன் அழகுகூட இந்த இடத்தின் அழகுக்கு இணை சொல்ல முடியாது. இந்த மாடம் அவ்வளவு சிங் காரமாகவும் ஸ்ொகுசாகவும் இருக்கிறது. தங்களுக்கு - அநுபவ முதிர்ச்சியும் யூகமும் அதிகமாகையால், தாங்கள் இந்த இடத்தை தேவேந்திர னுடைய கொலுமண்டபம் போல ஜோடித்திருக்கிறீர்கள்' என்று மிகவும் முகஸ்துதி யாகப் பேசினாள். - அதைக் கேட்ட கிழ ஜெமீந்தார் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவராய் தாம் கொணர்ந்திருந்த நோட்டுகளை அவளிடத்தில் கொடுக்க அவள் நன்றியறிதலும் களிப்பும் தோற்றுவித்தவளாய், அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள். அதன்பிறகு அவள் அதற்குமேல் அரைநாழிகை நேரம் வரையில் அவ்விடத்தில் அவரோடு ஆனந்தமாக இருந்தபின், அவரிடத்தில் செலவு பெற்றுக்கொண்டு அவ்விடத்தைவிட்டு வெளியில்போய்விட்டாள். அப்போது கடிகாரத்தில் மணி நாலரை ஆகியிருந்தது. அந்தத் திருடன் அன்றையதினம் தமது தினசரி டைரியைக் கொண்டு வருவானோ மாட்டானோ என்ற சந்தேகம் அவரது மனதில் ஜனிக்க ஆரம்பித்தது. அவர் மறுபடியும் எழுந்து ஜன்னலண்டை போய்ப் பார்த்தார். கண்ணில் லாக் கபோதியாக நடித்துக் கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்போதும் முன்போலவே பிச்சை கேட்டபடி உட்கார்ந்திருந்தார். அவரது முகம் ஆகாயத்தைப் பார்ப்பது போல மேலே