பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 209 திருப்பப்பட்டிருந்ததானாலும், அவரது பார்வை, வெல்வெட்டு மாடத்தின் பக்கத்தில் இருந்த கோவிந்தனது அறை ஜன்னலின் திரையிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜெமீந்தார் காலையிலிருந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே இருந்தாராகையால், அவர்தமது காலின்கடுப்பைத் தீர்த்துக் கொள்ளும் எண்ணத்தோடு அந்த வெல்வெட்டு மாடத்திலேயே அங்கும் இங்கும் உலாவத் தொடங்கினார். மணி ஐந்து, ஆறு கூட அடித்துவிட்டது.அப்போதும் அந்தத் திருடன் வரவில்லை. அவரது மனதில் கவலையும் கலக்கமும் உண்டாகத் தொடங்கின. அந்தத் தினசரி டைரிக்குள் மிகவும் ரகசியமான சில காதல் கடிதங்கள் இருந்தமையால் அவைகள் வெளியானால், மிகவும் பெரிய மனிதர்களான சிலரது மனைவிமார்களின் கற்பிற்குப் பெருத்த களங்கமும், அவமானமும் ஏற்படக்கூடியதாக இருந்தமையால், அவரது கலவரம் அதிகரித்தது. அவை மாத்திரமல்ல. இளவரசரால் அவருக்குப் பல தடவைகளில் எழுதப்பட்ட மிகவும் விகாரமான சில கடிதங்களும் அதற்குள் இருந்தன. ஆகையால், அந்த டைரிப் புஸ்தகத்தை எப்படியும் திரும்ப வாங்கியே தீரவேண்டும் என்ற ஒரே உறுதியை ஜெமீந்தார் கொண்டிருந்தார். ஆதலால், அந்தத் திருடன், ஒருகால் பகலில் வர அஞ்சி இரவு தோன்றியவுடனே வருவானோ என்ற சந்தேகித்தவராய், அவர் அந்த மாடத்தைவிட்டுப் போகாம லேயே அன்று ராத்திரி முழுதும் இருந்து பார்த்துவிட வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்தைச் செய்து கொண்டவராய், அவ்விடத்திலேயே இருந்தார். அவர் சிறிதுநேரம் ஸோபாவின் மீது உட்காருவதும், சிறிது நேரம் எழுந்து உலாவுவதுமாக இருந்து, மாறிமாறிப் பற்பல விஷயங்களை நினைத்து நினைத்துப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார். அவரது நினைவு பூர்ணசந்திரோதயத்தின் விஷயத்திலும் பார்சீ ஜாதிப் பெண்ணின் விஷயத்திலும் அன்றையதினம் வந்த லீலாவதி, அம்மணிபாயி, பூ.ச.i-15 -