பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பூர்ணசந்திரோதயம்-1 கலியாணராமன் முதலியோரது விஷயத்திலும் மாறி மாறிச் சென்றுகொண்டே இருந்தது. அவ்வாறு அவர் சிந்தனை செய்து திருடனது வருகையை எதிர்பார்த்தவராய்த் தமக்குப் பக்கத்திலிருந்த ரோஜாப் புஷ்பத் தொட்டியண்டை போன போது, கலியாணராமன் அதற்குள்ளிருந்த பிஸ் டலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் அவரது நினைவிற்கு வந்தது. "பூச்செண்டுக்குள்பிஸ்டல் இருந்ததைக் கண்டு பையன் மிகவும் பயந்திருப்பான். அவன் வருவதாக எழுதியிருந்ததைக் கருதியே நான் இந்தப் பிஸ்டலை ஒளித்து வைத்திருப்பதாக அவன் எண்ணினாலும் எண்ணியிருப்பான். மகாகர்வம் பிடித்தவன். தறுதலைப் பையன். அவன் எப்படியாவது நினைத்துக் கொள்ளட்டும். நேற்று முளைத்த முளையாகிய அவன் எனக்கு ஹிதோபதேசம் பண்ணவல்லவா ஆரம்பிக்கிறான். நான் பரஸ் திரீ கமனத்தில் நாட்டமாக இருக்கிறேனாம். அதனால், அவனுக்கு என்னோடு கூட இருக்க இஷ்டம் இல்லையாம். முன்காலத்தில் பூரீராமர் ஏகபத்தினி விரதராக இருந்தாராம்; அவருக்குப் பதிலாக இந்தக் கலிகாலத்தில் இந்தக் கலியாணராமன்அவதார புருஷனாகத் தோன்றியிருக்கிறான் போலிருக்கிறது. சுத்தக் குறும் பன்! உலகத்தை யெல்லாம் அவன்தான் சீர்திருத்த வந்திருக்கிறானோ! முழுமுட்டாள் மடையன் என்று தமக்குத்தாமே எண்ணமிட்ட வண்ணம் அந்தப்பூத்தொட்டியிலிருந்த புஷ்பச் செண்டை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு, பிஸ் டல் சரியான இடத்திலிருக்கிறதா என்பதைப் பார்க்கும் பொருட்டு, தமது கையை நுழைத்து அங்கே இருந்த பிஸ்டலை எடுத்துப் பார்த்து முன்போலவே வைத்துவிட்டு, அப்படியே அடுத்த பூத்தொட்டியில் வைக்கப்பட்டிருந்த இன்னொரு பிஸ்டலையும் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் கொண்டவராய், அவர் அந்தப் பூத்தொட்டி யண்டை போய், மேலே இருந்த பூச்செண்டை எடுத்தார். என்ன ஆச்சரியம்! அந்தச் செண்டிற்கு அப்பாலிருந்த பிஸ்டல்