பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 5 எதிர்பார்க்காத வகையில் திடீரென்று நேர்ந்தமையால், அதன் கொடுமை அவர்களால் சகிக்க ஒண்ணாததாக இருந்தது. அந்த மடந்தையரின் அத்தையான நீல லோசனியம்மாளுக்குத் திடீரென்று பக்ஷவாத நோய் ஏற்பட்டுப் போகவே, அவள் பாயும் படுக்கையுமாக ஆகிவிட்டாள். வாயைத் திறந்து பேசமாட்டாமல், அவளுக்கு வாய் அடைத்து போய்விட்டது. கைகளால் சைகை காட்டித் தனது மனதிலுள்ளதை வெளியிடலாமென்பதற்கும் கைகளும் சொரணையற்றுக் கட்டைபோலப் போட்ட இடத்தில் கிடந்தன. அவளது உயிர்மாத்திரம் உடலில் தங்கியிருந்தது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவள் நன்றாக உணர்வது; அவளது கண்களின் பிரகாசத்தினால் தெரிந்தது. ஆனால், அவளது உடம் பின் எந்தப் பாகமும், அவளது விருப்பத்தின்படி அசையாமல் உயிரற்ற மாம்சத்திரளாக இருந்தது. அவள் அப்படிப்பட்ட விபரீதமான நிலைமையிலிருந்தது அவள் இறந்து போவதைவிடப் பன்மடங்கு அதிகமான கொடுமை யாக இருந்தது. அந்த விபரீதத்தைக் கண்டு மிகுந்த கலக்கமும் திகிலும், கவலையும் கொண்ட அந்தப் பெண்மணிகள் இருவரும், கையைப் பிசைந்துகொண்டு, தாங்கள் என்ன செய்வதென்பதை அறியாமல் தத்தளித்திருக்க, அவர்களது வீட்டின் வேலைக்காரி யான முத்தம்மாள் என்பவள், அந்த ஊரிலுள்ள பிரபல வைத்தியனான நாவித முருகனை அழைத்து வந்து நீலலோசனி யம்மாளின் தேகக்கூறை உணர்ந்து அதற்குத் தகுந்த ஒளஷதங்களைக் கொடுக்கும்படி செய்தாள். அவன் தன்னால் இயன்ற வரையில் முயன்று பலநாட்கள் வரையில் மருந்துகள் கொடுத்ததெல்லாம் சாம்பலில் பெய்த நெய்போல வீணாயிற்று. அந்த ஊரில் அவர்களுக்குப் பழக்கமாக இருந்த சில மனிதர்களது யோசனையின் மேல் வேறே ஊர்களிலிருந்த பல பிரபல வைத்தியர்களும் வருவிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது திறமையை முற்றிலும் புலப்படுத்தி மாதக்கணக்கில் அங்கே இருந்து சிகிச்சை செய்து பார்த்தனர். ஆனால்