பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 212 பூர்ணசந்திரோதயம்-1 அந்தச் சமயத்தில் திருடன் வந்து தமது சட்டைப்பையிலிருந்த நோட்டுக் கற்றையையும் பிஸ் டலையும் எடுத்துக்கொண்டு தினசரி டைரியை வைத்துவிட்டுப் போயிருப்பானோ என்றும் அவருக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. தமது மேஜையின் மேலாவது பூத் தொட்டியிலாவது தமக்கு அந்தத் திருடன் ஏதாவது கடிதம் வைத்திருப்பானோ என்று சந்தேகித்தவராய் அவர் அந்த இடங்களையெல்லாம் மிகவும் ஜாக்கிரதை யாகத் தேடிப் பார்த்தார். வேறே எந்தக் கடிதமும் அங்கே காணப்படவில்லை. அவர் உடனே ஒரு விசையை அழுத்தி, தமது அந்தரங்கக் காரியதரிசியான கோவிந்தனை வரவழைத்து, 'கோவிந்தா இன்று காலையில் நீ பிஸ் டலையும் பூச்செண்டுகளையும் வைத்தாயே! எந்தெந்தத் தொட்டிகளில் வைத்தாய்?" என்றார். 'இதோ தங்களுடைய மேஜைக்கு இரண்டு பக்கங்களிலும் உள்ள இரண்டு தொட்டிகளிலும்தான் வைத்து பூச்செண்டுகளை மறைவாக வைத்தேன்' என்றான் கோவிந்தன். ஜெமீந்தார், 'அப்போது இந்தத் தொட்டிகளுக்குள் நீகையை விட்டுப் பார்த்தாயா? வேறே ஏதாவது வஸ்துக்கள் தொட்டிக்குள் இருந்தனவா?’ என்று பதைப்பாகக் கேட்டாள். கோவிந்தன், 'எஜமானே! நான் இரண்டு தொட்டிகளிலும் கையை விட்டு நன்றாகப் பார்த்துவிட்டுத்தான் பிஸ்டல்களை வைத்தேன்; சந்தேமில்லை' என்று உறுதியாகக் கூறினான். அதைக்கேட்ட ஜெமீந்தார், தாம் காண்பது கனவோ, அல்லது உண்மையோ என்ற ஐயமுற்றவராய், "என்ன விநோதம் இது!" என்று கூறிக்கொண்டே மறுபடியும் ஜன்னலண்டை போய்ப் பார்க்க, அப்போதும் அந்தக் கண்ணில்லாக் கபோதி முன் போலவே உட்கார்ந்துகொண்டிருந்தது தெரிந்தது. ஜெமீந்தார் உடனே கோவிந்தனை நோக்கி, “கோவிந்தா அதோ ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருக்கிறான் பார்த்தாயா? அவனண்டை