பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பூர்ணசந்திரோதயம்-1 சந்தோஷத்தைப் போக்கிவிட்டது. அந்தத் தபால்காரன் அவளிடத்திற்கு அருகில் வருகிறவரையில் அவள் தீத்தணலின் மீது நிற்பவள்போல மட்டுக்கடங்கா வேதனைக்கு ஆளாகி நின்றாள். அவளது ஹிருதயம் தடதடவென்று அடித்துக் கொள்ளுகிறது; பாட்டையோடு சென்ற தபாற்காரன் அவள் இருந்ததைக்கண்டு நின்று தனது கைநிறைய அடுக்கி வைத்துக்கொண்டிருந்த கடிதங்களைத்தள்ளித் தள்ளிப்பார்த்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு அவளண்டை நெருங்கி வருகிறான். ஆகா! அந்த ஒரு நிமிஷமும் ஷண்முகவடிவிற்கு ஒரு பெருத்த கற்பகாலமாகத் தோன்றுகிறது. அவளது ஆவலும், சந்தேகமும் அவளால் சகிக்கக்கூடிய வரம்பை மீறிப்பெருகிக் போயின. கடைசியில் அவள் ஆவலோடு எதிர்பார்த்த கடிதத்தை அவள் வாங்கினாள். மேல் விலாசத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் தனது அருமைச் சகோதரியின் எழுத்துகள் என்பதை உணரவே, வெடவெடவென ஆடிய கைகளும், தடதடவென அடித்துக் கொண்ட ஹிருதயமும் உடையவளாய், அந்தப் பூங்கோதை அதன் உறையைக் கிழித்து உள்ளே இருக்கும் கடிதத்தை எடுக்கிறாள். அதற்குள் ஒர் உண்டியல் இருக்கக் காணவே, தனது அக்காள் போன காரியம் பலித்துவிட்டதென்றே எண்ணம் அவளது மனதில் தோன்றியதானாலும் அவளது நினைவுகளும் ஆவலும்; தனது அக்காள் எப்போது திரும்பிவருகிறாள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய தாகவே இருந்தன. ஆகவே, அவள் அந்த உண்டியலோடு கூட இருந்த கடிதத்தை எடுத்துப் படிக்கலானாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: அருமைத்தங்கையான செளபாக்கியவதி ஷண்முகவடிவுக்கு தீர்க்க சுமங்கலியமும் சர்வாபீஷ்டமும் உண்டாவதாக. நான் சுகமாகவும் பத்திரமாகவும் இங்கே வந்து சேர்ந்து, செளக்கியமாக இருக்கிறேன். அதுபோல, அவ்விடத்தில் நீ