பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் -- 223 மடந்தை, 'ஆம்; நான்தான். ஏன் கேட்கிறீர்கள்?' என்று மரியாதையாக வினவினாள். உடனே பண்டாரம், 'இல்லையம் மா! நீ அறியாத சின்னக் குழந்தையாக இருக்கிறாய்; வேறே ஆண்துணையில்லாமல் அவ்வளவு பெருத்த தொகையோடு நீ தனியாகப் போகிறாயே; இந்தத் திருவாரூர் சுத்தப்போக்கிரி பட்டணமாயிற்றே. பணத்தை ஜாக்கிரதையாகத் துணியில் முடிந்து மடியில் சொருகிக் கொள். எங்கேயாவது கடையிலாவது வழியிலாவது போட்டுவிடப் போகிறாய். நீ பணம் வைத்திருப்பது முடிச்சுமாறிகளுக்குத் தெரிந்தால், பிற்பாடு பணம் உன்னுடையதல்ல. ஜாக்கிரதையாக மறைத்து வைத்துக்கொள். இந்த விஷயத்தை உன்னிடத்தில் சொல்லி எச்சரிப்பதற்கும், யார்ாவது துஷ்டர்கள் வந்து இடக்குப் பண்ணாமல் பார்த்துக் கொள்வதற்குமே நான் உன்னைத் தொடர்ந்து இவ்வளவு தூரம் வந்தேன்' என்று தேனும்பாலு மாகவும் மகா உருக்கமாகவும் அளவற்ற கரிசனத்தோடும் கூறினார். அவரது அன்பான சொற்களைக் கேட்கவே, ஷண்முகவடிவிற்கு உயிர் வந்தது. அவள் சரியாக மூச்சுவிடத் தொடங்கி அவரது பரோபகார குணத்தையும், உண்மையான அருளையும் கண்டு நன்றியறிதலும் பக்தி விநயமும் கொண்டவளாய், 'சுவாமிகள் சொல்லுகிறபடியே நான் பணத்தைப் புடவைத் தலைப்பில் முடிந்து இடுப்பில் சொருகிக் கொண்டுதான் இருக்கிறேன். இவ்வளவு பெரிய பட்டணத்தில் பட்டப் பகலில் போக் கிரிகள் இடக்குப் பண்ணினால் ஜனங்கள் விட்டுவிடுவார்களா? அதெல்லாம் ஒன்றும் நடவாது' என்று அழுத்தமாகக் கூறினாள். உடனே பண்டாரம், “இல்லையம்மா! அப்படிச் சொல்லக் கூடாது. உன்னைப்போல இருக்கும் பெண் குழந்தைகள் கொஞ்சம் எச்சரிப்பாகத்தான் இருக்க வேண்டும். நீ இந்த ஊருக்குள் இருக்கிறவரையில் பயமில்லைதான்.ஆனால், நீ