பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 225 அந்தத் தெருவில் இருபுறங்களிலும் தனது பார்வையைச் செலுத்திப் பார்க்க, பண்டாரம் காணப்படவில்லை. ஆகவே அவர் முன்னால் போய்விட்டார் என்று அந்த மடந்தை நினைத்து, அந்தச் சம்பவத்தை அவ்வளவோடு மறந்தவளாய், அவ்விடத்தை விட்டு நடந்து மேலும் சில இடங்களிற்குப் - போய்த் தங்களுக்குத் தேவையான சிற் சில வஸ்துக்களை வாங்கிக்கொண்டு திருவாரூரைவிட்டு நாகைப்பட்டணத்திற்குச் செல்லும் பாட்டையோடு தனது மாளிகையை நோக்கி நடக்கலானாள். அந்தச் சாலையின் இருபக்கங்களிலும் தோப்புகளும், ஆலமரப் பத்திகளும் அடர்ந்து, குளிர்ச்சியும் நிழலும் நிறைந்ததாக இருந்தது. ஆங்காங்கு கால்வாய்களின் பாலங்களும், பாழ் மண்டபங்களும் இருந்தன. ஷண்முகவடிவு தனது பங்களாவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது மாலை 6 மணி சமயமாகி இருந்ததாகையால் சூரியன் மேற் றிசையில் மறையும் சமயத்தில் இருந்தான். சூரியன் இருந்த திக்கில் மஞ்சள்வெயில் பிரகாசித்துக்கொண்டிருந்தது. மற்ற திசைகளில் எல்லாம் மாலை மயங்கிக் கொண்டிருந்தது. தான் இருந்த மாளிகை அதிக சமீபத்தில் இருந்தது ஆகையாலும் அந்தப் பாட்டையில் திருடர் பயம் அவ்வளவாக இல்லாது இருந்தமையாலும், ஷண்முக வடிவு விரைவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். திருவாரூருக்கு வெளியில் கால்மைல் தூரத்தில் ரஸ்தாவின் ஒரத்தில் பனைமட்டையால் வேயப்பட்ட ஒரு குடிசை இருந்தது. அவ்விடத்தில் கள் விற்கப்பட்டு வந்தது. ஆகையால் அந்த ஒரிடத்தில் மாத்திரம் இரவுபகல் எப்போதும் சண்டையும், பூசலும், சச்சரவுமாக இருப்பது வழக்கம். ஆனால், ஷண்முக வடிவு அதற்குமுன் இரண்டடொரு தரம் அந்த ரஸ்தாவின் வழியாகப் போயிருந்தாளானாலும் அந்தக்கள் கடையிலிருந்த குடியர்கள் எவரையும் அவள் கடைக்கு வெளியில் பார்த்ததில்லை; ஆகையால், அவள் இப்போதும் எவ்வித அச்சமும் இன்றி, ரஸ்தாவிற்கு அருகிலிருந்த பூ.ச.1-16