பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பூர்ணசந்திரோதயம்-1 கையில் ஒரு பெருத்த தடிக் கம்போடு அந்தத் திருடரை அதட்டிக்கொண்டு அவளை நோக்கி ஓடிவந்த மனிதர் யார் என்பதை அறிய ஆவல் கொண்டவளாய், நமது இளந் தோகையான ஷண்முகவடிவு, அந்தப் பக்கம் திரும்பிப்பார்க்க, அவளுக்கு உண்டானவியப்பும் மகிழ்ச்சியும் அளவில் அடங்கா தனவாக இருந்தன. யாரோ பல மனிதர்கள் திருடரைத் துரத்து கிறார்கள் என்று அவள் அதுவரையில் நினைத்திருந்ததற்கு மாறாக, ஒரே ஒரு மனிதர் அங்கே வந்து சேர்ந்ததையும், அப்படி வந்த மனிதர் திருவாரூர் பாங்கியிலிருந்து ஜவுளிக்கடை வரையில் தன்னைத் தொடர்ந்து வந்தவரான காஷாய வஸ்திரப் பண்டாரமாக இருந்ததையும் காண, அவள் மிகுந்த ஆச்சரியம் அடைந்ததன்றி, தனக்கு மிகவும் ஆப்தரான ஒரு நண்பரைக் கண்டவள் போல, மிகுந்த தைரியமும் மகிழ்ச்சியும் கொள்ளலானாள். அந்த முரட்டுக் கள்வர், தனது பொருட்களை அபகரித்துத் தனது திரேகப் பரிசுத்தத்தைக் கெடுக்கப்போன மகா அபாயகரமான அந்த நல்ல தருணத்தில் ஈசுவரன்போலப் பிரத்தியகூஷூமாகித் தனது மானத்தையும் உயிரையும் காப்பாற்றிய புண்ணியவானான அந்தப் பண்டாரத்தைக் கண்டவுடனே, அவளது மனதில் நன்றியறிதலும், மகிழ்ச்சியும் பொங்கி எழுந்தன. அவள் தன்னை அறியாமலேயே தனது இரு கரங்களையும் எடுத்துக்குவித்து, பண்டாரத்தைக் கும்பிட்டு, 'சுவாமிகள் செய்த உபகாரம் மகா பெரியது; இந்தச் சமயத்தில் தாங்கள் வந்திராவிட்டால் இந்நேரம் என்னுடைய மானம் போயிருக்கும். நான் உடனே என் பிராணனை மாய்த்துக் கொண்டிருப்பேன். அநாதரவாக வீட்டில் படுத்திருக்கும் என்னுடைய அத்தையும் நாதியற்று அகால மரணம் அடைந்து விடுவார்கள். தாங்கள் செய்த இந்தப் பேருதவியினாலேதான், நாங்கள் தப்பிப் பிழைத்தோம். சுவாமிகள் இந்தப் பெரிய புண்ணியத்தைக் கட்டிக் கொண்டீர்கள்' என்று மிகமிக உருக்கமாகவும் அந்தரங்கமான பக்தி விநயத்தோடும் கூறி வணங்கினாள். -