பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7 போய்ப் பணம் வாங்கிக் கொண்டு வந்ததை அவள் அறிந்து கொண்டிருந்தாளாதலால், தான் அங்கே போய் விசாரித்தால் உண்மை தெரியவரும் என்ற நம்பிக்கை கொண்டவளாய், ஷண்முகவடிவு தனது வேலைக்காரியை அழைத்துக் கொண்டு திருவாரூரிலிருந்த செட்டியார் பாங்கிக்குப் போய்த் தங்களது வரலாற்றைச் சொல்லி, தங்களுக்கு எங்கிருந்தாகிலும் பணம் வருவதுண்டா வென்று விசாரித்தாள். அந்த பாங்கியின் நிர்வாகஸ்தரான செட்டியார் மிக அன்பாகவும், மரியாதை யாகவும் ஷண்முக வடிவை வரவேற்று, தங்களுடைய பாங்கியின் சொந்தக்காரர்.தஞ்சைநகரத்தில் ஒரு பெருத்த பாங்கி வைத்திருப்பதாகவும், அதன் கிளைபாங்கியே திருவாரூரிலி ருப்பதென்றும், ஆறு மாதத்திற்கொருமுறை நீலலோசனியம் மாளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படி தஞ்சை நகரத்து பாங்கியிலிருந்து உத்தரவு வருவதும், நீலலோசனியம்மாள் வந்து அதைப் பெற்றுக்கொண்டு போவதும் வழக்கமென்றும், அதைத் தவிர மற்ற விவரம் எதுவும் தமக்குத் தெரியாதென்றும் செட் டியார் சொன்னதன்றி, தாம் உடனே தமது தலைமை பாங்கிக்கு அந்த விபரங்களை யெல்லாம் எழுதுவதாகவும், நீலலோசனி யம்மாள் விபரீதமான நிலைமையிலிருப்பதால் பெண்கள் இருவரும் அநாதரவாகத் தவித்திருக்கும் விஷயத்தை எடுத்துக் கூறுவதாகவும் வாக்களித்து ஷண்முகவடிவை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு சில நாட்கள் கழிந்தன. மறுபடியும் ஷண்முக வடிவு செட்டியாரது பாங்கிக்குப் போய் விசாரிக்க செட்டியார் அவளுக்குச் சந்தோஷகரமான செய்தியைத் தெரிவித்தார். தஞ்சையிலுள்ள சோமசுந்தரம் பிள்ளை என்ற ஒருவருடைய பணம் தஞ்சையிலுள்ள பாங்கியிலிருப்பதாகவும், அவரது உத்தரவின் மேல் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நீலலோசனி யம்மாளுக்கு அவ்வாறு பணம் கொடுத்து வரப்பட்ட தென்றும், அப்போது நீலலோசனியம்மாள் பகடிவாதத்தினால்