பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 - பூர்ணசந்திரோதயம்-1 இப்போது இவர்கள் உன்னிடத்தில் இருந்த எல்லா சாமான்களையும் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்களா? மிகுதிப்பணம் பத்திரமாக இருக்கிறதல்லவா?’ என்றார். அதைக்கேட்ட ஷண்முகவடிவு மிகுந்த கிலேசமும் சஞ்சலமும் அடைந்தவளாய் வெட்கமுற்றுக் கீழே குனிந்து, "ஆம், பணம் சாமான்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு போய்விட்டார்கள். தங்களுடைய வார்த்தையை லட்சியம் பண்ணாமல், நான் தனியாக இப்போது இங்கே வந்தது தவறுதான். எதுபோனாலும் போகட்டும். இவர்கள் வேறுவிதமாக என்னை இழிவுபடுத்தாமல், சொத்தோடு போனார்களே, அதுவே போதுமானது' என்றாள். பண்டாரம், சொத்து போனால் போகட்டும். இந்த ஆட்களெல்லாம் இன்னார் என்பது எனக்குத் தெரியும்; என்னுடைய மடம் இதோ பக்கத்தில் இருக்கிறது. அதற்கடுத்தாற்போல் வீடுகள் இருக்கின்றன. அங்கே இந்த ஊர்ப் பண்ணை மிராசுதார் சிதம் பரநாதபிள்ளை என்று ஒரு தனிகர் இருக்கிறார். அவருக்கு இருநூறு வேலி நிலமிருக்கிறது. இந்தப் பக்கத்துக்கே அவர்தான் மகா பிரபலமான பெரிய மனிதர். அவருக்கு நிரம் பவும் செல்வாக்கு உண்டு. இந்தக் குடியர்கள்கூட அவருடை பண்ணையாட்களாகத்தான் இருக்க வேண்டும். நான் உடனே போய், அவரிடத்தில் இந்தச் சங்கதியைச் சொன்னால் அவர் உடனே இந்த நாய்களைப் பிடித்துத் தொழுக்கட்டையில் அடித்து, சாமான்களையும் பணத்தையும் வாங்கிக்கொடுத்து விடுவார். ஆகையால், நீ இப்போது என்னோடு கூடவே வருவாயானால், இன்னம் அரை நாழிகைக்குள் பணமும் சாமான்களும் உன்னிடம் வந்து சேர்ந்துவிடும். அவர் சில ஆட்களையும் உனக்குத் துணையாக உன்னோடு அனுப்பி, உன்னைப் பத்திரமாக உன்னுடைய ஜாகையில் கொண்டுபோய் விடச் செய்வார். ஆகையால் நீ என்னோடு கூடவே வா; இதோ கூப்பிடு தூரத்தில் என்னுடைய மடம் இருக்கிறது” என்றார்.