பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 237 அறிந்து, அதைத் தடுப்பதற்காகவே நான் உன்னைத் தொடர்ந்து வந்தது. ஆகையால், நீ எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உன்னை ஜாக்கிரதையாக உன்னுடைய ஜாகையில் கொண்டுபோய் விடுவது என்னைச் சேர்ந்த பொறுப்பு: வா போகலாம். நான் இருக்கும் ஊர் இதோ ஒரு கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது' என்று அவளுக்குத் தென்பான மொழிகள் கூறி, அவளை அழைத்துக்கொண்டு அந்த ரஸ்தாவோடு செல்லலானார். பண்டாரம் முன்னாலும் மடவரல் பின்னாலுமாக அவர்கள் அதே பாதையில் மேலும் அரைக்கால் மைல்துாரம் சென்றனர்; அதன்பிறகு அவ்விடத்திலிருந்து பிரிந்து தெற்குத் திக்கில் சென்ற ஒர் ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்தே தமது மடத்திற்குப் போகவேண்டும் என்று பண்டாரம் கூறி, ஷண்முகவடிவையும் அழைத்துக்கொண்டு அந்தப் பாதையின் வழியாகச் சென்றார். அப்போது மாலை 7 மணி சமயம் ஆகிவிட்டது. ஆகையாலும், அது முன்னிருட்காலம் ஆனதாலும் எங்கும் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. கண்காணும் தூரம்வரை வேறே மனிதரே காணப்படவில்லை. மனிதர் பேசிய குரலும் கேட்கவில்லை. பண்டாரம் ஷண்முக வடிவின் குடும்ப வரலாறுகளையும் யோக rேமங்களையும் பற்றி அந்தரங்க அன்போடு விசாரித்து, அவளுக்கு அநுதாபமான வார்த்தைகளைக் கூறிக் கொண்டே முன்னால் நடக்க, ஷண்முகவடிவின் ஹிருதயம் திடுக்கு திடுக்கென்று அடித்துக் கொண்டேயிருந்தது. உடம்பு அடிக்கடி நடுங்கி மயிர்க் கூச்சலுற்றது. என்றைக்கும் இல்லாத விபரீதமாக தான் அன்றைய தினம் அப்படிப்பட்ட விபத்தில் மாட்டிக் கொண்டிருப்பதையும், முன்பின் அறியாத ஒரு பண்டாரத்தோடு இருளில் தான் தனியாக எங்கேயோ போய்க்கொண்டி ருப்பதையும் நினைத்து அவளது மனது பெருத்த திகிலும் சஞ்சலமும் அடைந்து தத்தளித்து தான் அவ்வாறு போவதிலி ருந்து தனக்கு ஏதேனும் பெருத்த விபரீதம் சம்பவிக்குமோ என்ற அச்சம் அடிக்கடி தலைகாட்டிக் கொண்டிருந்தது. அவள்