பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பூர்ணசந்திரோதயம்-1 அதற்குமுன் இருளில் அப்படிப்பட்ட மரம் அடர்ந்த நிலங்களைப் பார்த்தவளே இல்லை. ஆதலால், பெருத்த பேய்கள் போலத் தலைவிரித்து நின்ற தென்னை பனை முதலிய மரங்களை இருளில் பார்க்க, அவளுக்குக் குலைநடுக்கம் உண்டாயிற்று. புதருக்குள் கீரி, ஓணான், நரி முதலிய ஜெந்துக்கள் மடமடவென்ற ஒசையுடன் சென்றபோதெல்லாம் அவளது மெல்லிய மேனி கிடுகிடென்று ஆடியது. ஆந்தை கோட்டான் முதலிய நிராசரப் பறவைகளும், நரிகளும் காள் கூளென்று அரற்றி ஆரவாரம் செய்ததைக் கேட்கக் கேட்க, அவளது உயிரே தள்ளாடியது. அப்படிப்பட்ட் மகா பயங்கரமான நிலைமையில் வந்துகொண்டிருந்த ஷண்முகவடி வினிடத்தில் பண்டாரம் அடிக்கடி ஏதேதோ கேள்விகள்கேட்டு, அவளது பயத்தைத் தெளிவிக்க முயன்றவராய் அவளை நடத்திக்கொண்டு சென்றார். ஒற்றையடிப் பாதையில் அடிக்கடி பாம்புகள் சரசரவென்று நகர்ந்துபோன ஓசை உண்டான ஆகையால், அதைக்கேட்டு அந்தப்பெண்பாவை கிலி கொள்ளப் போகிறாளே என்கிற நினைவினாலும் அந்த துஷ்ட ஜெந்துக்கள் தம்மை கடித்துவிடப் போகிறதே என்கிற முன் ஜாக்கிரதையினாலும் தூண்டப்பட்டவராய், பண்டாரம் தமது கையிலிருந்த மூங்கில் தடியை முன் பக்கத்தில் லொட்டு லொட்டென்று தட்டிக்கொண்டே நடந்தார். அவ்வாறு நடந்து அவர்கள் தெற்குப் பக்கமாக அரைக்கால் மைல் தூரம் போக அவ்விடத்தில் ஒர் ஆறு குறுக்கிட்டது. அதைக் கண்டவுடனே ஷண்முகவடிவு கட்டிலடங்காப் பெருந்திகிலும் கலவரமும் அடைந்தவளாய், “என்ன இது? ஆறு மாதிரி இருக்கிறதே!ஜலம் அதிகமாக இருக்குமோ என்னவோ? இதைத் தாண்டி அப்புறம் போகவேண்டுமா?" என்று மிகவும் பரிதாபகரமாகக் கேட்க, பண்டாரம் அவளுக்குத் தெம்பு உண்டாக்கத் தக்கபடி பேசத் தொடங்கி, 'ஆம் அம்மா இது ஒரு சின்ன வாய்க்கால்; கொஞ்ச அகலந்தான். நாம் தாண்டின உடனே, இதற்கு அப்பால் நாலைந்து வயல்கள் இருக்கின்றன; உடனே என்னுடைய