பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பூர்ணசந்திரோதயம்-1 நகரமாட்டாமல் கிடப்பதை அறிந்து மேற்படி ஆகிய இருவரது கையெழுத்துகளுள்ள ரசீதைப் பெற்று ஆறுமாத காலத்திற்கு ஒருமுறை அனுப்பி வைத்தால், மேற்படிப் பணத் தொகையைக் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தஞ்சையிலிருந்து மறுமொழி கிடைத்திருப்பதாகச் செட்டியார் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்தார். அந்த நற்செய்தியைக் கேட்டு மிகவும் களிகொண்டு திரும்பிய ஷண்முக வடிவு தனது ஜாகையை அடைந்து அந்த மகா சந்தோஷகரமான சமாசாரத்தைத் தனது அக்காளிடத்தில் தெரிவித்து அவளை இன்புறச் செய்து வழக்கம்போலத் தனது குடும்பக் காரியங்களைச் சரிவர் நடத்திவரலானாள். அந்தப் பெண்மணி அப்போதும் நிபுணர்களான பல வைத்தியர்களை வருவித்துத் தனது அத்தைக்கு ஆகவேண்டிய சிகிச்சைகளைச் செய்வித்து வந்ததன்றி, அவளுக்குரிய ஆகாராதி சகல செளகரியங்களுக்கும் எவ்விதக் குறைவு மின்றிப் பார்த்து வந்தாள்; கமலம் தனது இயற்கைப்படியே சதாகாலமும் சந்தோஷ புருவியாக இருந்து, உண்பதும் உடுப்பதும் உல்லாசமாய்ப் பலவிதமாகப் பொழுதைப் போக்குவதுமே வேலையாகச் செய்துவந்தாள். அவ்வாறு ஒன்றரை வருஷகாலம் எவ்விதத் துன்பமுமின்றி சந்தோஷகரமாகக் கழிந்தது. அதற்குள், அவர்களிருவரும் கையெழுத்துச் செய்த ரசீதுகளை பாங்கிக்கு அனுப்பி அவர்கள் மூன்றுதரம் ஆயிரம் ரூபாய் வாங்கி, சுகமாகக் காலrேபம் செய்துவந்தார்கள். நான்காவது ஆறுமாதம் வந்தது. வழக்கப்படி பெண்மணிகள் ரசீது தயாரித்து திருவாரூர் பாங்கியில் கொடுக்க, அது தஞ்சைக்குச் சென்று வழக்கப்படி இரண்டு நாட்களில் திரும்பிவந்தது. ஆனால், பணம் கொடுக்கும்படி அதன்மேல் உத்தரவு செய்யப்படாமலிருந்தது அன்றி, அந்த பாங்கியின் அதிபரான செட்டியார், அதன்மேல்,"சோமசுந்தரம் பிள்ளையின் உத்தரவு கிடைக்கவில்லையாகையால், பணம் பட்டுவாடா செய்ய வேண்டாம் என்று எழுதியனுப்பி யிருந்தார். அந்த