பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 245 அவர் தன்மீது அருவருப்படைந்து அவ்வாறு வருத்தமான சொற்களை உபயோகிக்கிறார் என்று உணர்ந்து கொண்ட ஷண்முகவடிவு, தான் அவசரப்படுத்தியது தவறு என்று நினைத்து, தன்னைத் தானே கடிந்துகொண்டு திரும் பவும் அவரிடத்தில் மரியாதையாகப் பேசத் தொடங்கி, "சுவாமிகள் கோபித்துக்கொள்ளக்கூடாது. எண்ணறக் கற்றாலும், எழுத்தறப் படித்தாலும், பெண் புத்தி பேதைமை உடையது என்பது சுவாமிகளுக்குத் தெரியாதா? அநாதையாகப் படுத்திருக்கும் அத்தையை பற்றிய கவலை என் மனசை அவ்வளவு அதிகமாக வதைக்கிறது. அதனால்தான் அப்படிக் கேட்டேன். தாங்கள் சொல்லுகிறதுபோல முள்ளில் விழுந்து விட்டோம். உடம்பில் காயம் உண்டாகாமல் நிதானமாகத்தான் தப்பித்து வெளியில் வரவேண்டும். நேரம் ஆனது ஆகிவிட்டது. இன்னம் கொஞ்ச நேரத்தில் என்ன ஆகிவிடப் போகிறது" என்ற பணிவாகவும் தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டது போலவும் பேசினாள். அவளது சொல்லைக்கேட்ட பண்டாரம் மகிழ்ச்சியோடு நகைத்து, "ஐயோ! பாவம் ! நீ எப்படிப்பட்ட சங்கடமான நிலைமையில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாதா? நான் உலகைத் துறந்த பண்டாரம் ஆனாலும், ஈவிரக்கம், பச்சாதாபம், ஜீவகாருண்யம் முதலிய நற்குணங்களையும்கூட நான் துறந்துவிட்டவன் அல்ல. நீ கவலைப்படாதே அம்மா! இன்னம் ஒரே நிமிஷம். அதோ ஒரு ரஸ்தா தெரிகிறது பார். மரம் பத்தியாக இருப்பது தெரியவில்லையா! இந்த ஒற்றையடிப்பாதை போய் அந்த ரஸ்தாவில் சேருகிறது. அந்த ரஸ்தாவின்மேல் என்னுடைய மடமும், பக்கத்தில் தாமரைக் குளமும் இருக்கின்றன. அதற்கு அடுத்தாற்போல ஊர் இருக்கிறது' என்று கூறியவண்ணம் சிறிது தூரம் நடக்க, அவர்கள் நடந்த ஒற்றையடிப் பாதை, அவ்விடத்தில் குறுக்காகச் சென்ற ஒரு ரஸ்தாவில் கொண்டு போய்விட்டது.