பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பூர்ணசந்திரோதயம்-1 வேண்டும் என்று அந்த இளந்தோகை எண்ணிக்கொண்ட வளாய், அவ்விடத்தை விட்டு விக்கிரகங்கள் இருந்த இடத்திற்கு வந்து, அங்கே வைக்கப்பட்டிருந்த விளக்கை எடுத்துத் தனது இடக்கரத்தில் பிடித்துக்கொண்டு மறுபடியும் முற்றத்தில் இறங்கி இரண்டாவது கட்டின் கதவண்டை சென்று, அதன் தாழ்ப்பாளை மெதுவாகத் திறந்தாள். அந்தக் கதவு அப்புறத்திலும் தாளிடப் பெற்றிருக்குமோ என்ற சந்தேகம் அவளது மனதில் எழுந்தது. ஆனாலும், அது தவறான சந்தேகமாக முடிந்தது. ஏனெனில், கதவு உடனே திறந்துகொண்டது. அவள் நினைத்தபடி அந்தக் கதவின் அப்புறத்தில் இரண்டாவது கட்டின் நடை ஆரம்பமாயிற்று. ஷண்முகவடிவு கையில் பிடித்த விளக்கோடு அந்த நடையைக் கடந்து அப்பால் செல்ல, அவ்விடத்தில் இன்னொரு வாசற்படி இருந்தது. ஆனாலும், அதில் கதவு காணப்படவில்லை. ஆகையால், இன்னொரு கதவைத் திறக்கும் படியான பிரயாசையின்றி நமது மடவன்னம் அப்பால் நடந்தாள். முதற் கட்டில் இருந்ததுபோலவே இரண்டாவது கட்டிலும், தாழ்வாரம், கூடம், முற்றம் முதலியவை காணப்பட்டன. ஆனாலும், அவ்விடத்தில், மனிதராவது, மனிதர் வசிக்கும் குறிப்பை உணர்த்தக்கூடிய அடுப்பாவது சாமான்களாவது காணப்படவில்லை. அந்தக் கட்டு முழுதும் காலியாக இருந்தது. அவளது கையில் இருந்த விளக்கின் வெளிச்சத்தினால், அந்தக் கட்டின் அமைப்பு முழுதும் அவளுக்குத் தெரிந்துபோய் விட்டது. அந்த இரண்டாவது கட்டிலிருந்து கொல்லைப்பக்கம் போவதற்கு ஒரு வாசற் படி இருந்ததையும், அவள் கண்டுகொண்டாள். ஆனால், அந்த வாசலின் கதவும் மூடி உட்புறத்தில் தாளிடப்பட்டிருந்தது. அவளது மனதில் உடனே பெருத்த திகிலும் கலவரமும் பொங்கி எழுந்தன. இரண்டாவது கட்டில் மனிதர் இருக்கிறார்கள் என்று பண்டாரம் சொன்னது பொய்ம்மொழி என்ற நிச்சயம் அவளது மனதில் உண்டாக உண்டாக, அதோடு அவர் குறிப்பிட்ட