பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 9 விவரத்தை உணர்ந்த ஷண்முகவடிவு, சோமசுந்தரம்பிள்ளை என்பவர் ஒருகால் மறதியினால், தலைமை பாங்கிக்கு உத்தரவு கொடுக்காமலிருந்திருப்பார் என்று நினைத்தவளாய் மேற்படி சோமசுந்தரம் பிள்ளையின் மேல் விலாசத்தை தஞ்சை பாங்கியி லிருந்து தெரிந்துகொண்டு அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி, தாங்கள் பணம் இல்லாமல் துன்பப்படுவதாகத் தெரிவித்துக் கொண்டாள். அந்தக் கடிதத்திற்கு எவ்வித மறு மொழியும் கிடைக்க வில்லை. அவள் சில நாட்கள் பொறுத்துப் பொறுத்து இரண்டு மூன்று நான்கு கடிதங்கள் வரையில் எழுதிப் பார்த்தாள். மறுமொழியே கிடைக்கவில்லை. என்ன செய்கிறது! ஷண்முகவடிவு நெருப்பின்மேல் வீழ்ந்த புழுவெனத் துடித்து, திருவாரூர் பாங்கிக்குப் போய்ச் செட்டியாரிடத்தில் கூற, சோமசுந்தரம் பிள்ளையிடத்தில் போய், உண்மையான விவரங்களைக் கேட்டறிந்து தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்வதாக வாக்களித்தார். மறுபடியும் சில நாட்கள் சென்றன. ஷண்முகவடிவு பாங்கிக்குப் போய் விசாரிக்க, தஞ்சையிலிருந்து வந்த கடிதத்தில், மேற்படி பாங்கி குமாஸ்தா தமக்கு வேலை தொந்தரவு அதிகமாகவிருப்பதால் தாம் சோமசுந்தரம் பிள்ளையிடத்தில் போய் விசாரித்து எழுத செளகரியப்பட வில்லையென்று எழுதியிருந்த விஷயம் அவளுக்கு அறிவிக்கப் பட்டது. அதற்கு மேல் தாம் ஒன்றும் செய்வதற்கில்லை யென்றும், அவர்களே முகதாவில் தஞ்சைக்குப் போப் விசாரிப்பதே நலமென்றும் செட்டியார் கூறி ஷண்முகவடிவை அனுப்பிவிட்டார். கலங்கிய மனதும் வாடிய முகமும் கொண்டவளாய் வீட்டிற்கு வந்து சேர்ந்த அந்த இளைய மடந்தை நிகழ்ந்த விஷயங்களையெல்லாம் தனது அக்காளிடத்தில் சவிஸ்தாரமாகத் தெரிவிக்க, உடனே இருவரும் கலந்து நெடு நேரம் வரையில் யோசனை செய்து தங்களுள் எவளேனும் ஒருத்தி முகதாவில் தஞ்சைக்குப் போய் விஷயங்களை நிச்சய மாகத் தெரிந்துகொண்டு வருவதே முடிபெனத் தீர்மானித்தனர்.