பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பூர்ணசந்திரோதயம்-1 இடத்திற்குப் போய்ச் சேர்ந்து அதன் தாழ்ப்பாளை தடவிப் பார்த்தாள். அந்தத் தாழ்ப்பாளும் உட்புறத்தில் தாளிடப் பட்டிருந்தது. அன்றி, அதன்மேல் ஒரு பூட்டும் பூட்டப்பட்டிருந்தது. அதைக் கண்டும், பண்டாரம் பொய் சொல்லி இருக்க மாட்டார் என்ற நினைவே அவளது மனதில் தோன்றியது. அந்த இரண்டாவது கட்டிற்குப் பின்னால் ஏதேனும் திண்ணை இருக்கலாம் என்றும், அங்கே யாராவது மனிதர் இருக்கலாம் என்றும் அவள் ஒருவிதமாக வியாக்கியானம் செய்துகொண்டவளாய், அங்கே இருந்த கதவின் இடுக்கால் வெளிப்பக்கத்தில் தனது பார்வையைச் செலுத்த, அவ்விடத்தில் விசாலமான திண்ணைகள் காணப்பட்டன. அந்தத் திண்ணையில் சிறிது தூரத்திற்கு அப்பால் ஒரு வெளிச்சம் இருந்ததாகையால் அதன் வெளிச்சத்தின் உதவியால் அங்கே திண்ணை இருக்கிறது என்பது அவளுக்குத் தெரிந்தது. விளக்கிருந்த இடத்தில் யாரோ மனிதர் பேசிக்கொண்டிருந்த தாகவும் தோன்றியது. ஆனால், அந்தக் கதவிலிருந்த இடுக்கின் வழியாக விளக்கையாவது மனிதரையாவது அவள் நேரில் பார்க்க இயலாமலிருந்தது. சிறிது நேரத்திற்குமுன் அவள் விளக்கு வெளிச்சத்தின் உதவியால், அந்த இரண்டாங்கட்டு முழுதும் தனது பார்வையைச் செலுத்தி ஆராய்ச்சி செய்தகாலத்தில் கொல்லைப்பக்கத்துக் கதவிற்கு இரண்டு பக்கங்களிலும் சுவரில் இரண்டு ஜன்னல்கள் இருந்ததையும், அவைகளின் கதவுகள் மூடப்பட்டிருந்ததையும் அவள் பார்த்ததாக அவளது மனதில் ஒரு நினைவு உண்டாயிற்று. ஆகவே, தான் அந்த ஜன்னலண்டைபோய் அதன் கதவைத் திறந்து பார்த்தால், வெளிப்புறத்தில் விளக்கு இருந்த இடத்தைப் பார்க்கலாம் என்றும், அங்கே இருக்கும் மனிதரோடு பேசலாம் என்றும் தீர்மானித்துக்கொண்ட ஷண்முகவடிவு இருளில் சுவரைப் பிடித்துத் தடவிக்கொண்டே தனக்கு இடது பக்கமாகச் சென்று, நாலைந்து கஜதுரத்திற்கு அப்பாலிருந்த ஜன்னலண்டை