பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 255 போய்ச் சேர்ந்தாள். அதன் கதவுகள் முன் கூறப்பட்டபடி மூடித் தாளிடப்பெற்றிருந்தது. ஆனாலும், அவை எந்தப் பக்கத்தில் தாளிடப்பட்டிருந்தன என்பதை அவள் அந்த இருளில் அறிந்துகொள்ளக் கூடவில்லை. ஆகையால், அவள் தனது கையால் அந்தக் கதவு முழுதையும் தடவிப் பார்த்தே, அதன் தாழ்ப்பாள் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. ஆனால், அதன் இரண்டு கதவுகளும் ஒன்றாகப் பொருந்தி இருந்த இடத்தில் இடைவெளி பெரிதாக இருந்தது. ஆகையால், வெளிப்புறத்தில் இருந்த வெளிச்சம் அதன்வழியாகப் பளிச்சென்று பிரகாசித்தது. அதோடு, வெளிப் பக்கத்தில் இருந்த மனிதர் மனித இயற்கைப்படி சாதாரணமாகப் பேசாமல், திருடர்கள் பேசுவது போலத் தங்களது குரலை அடக்கிக் கொசகொசவென்று ரகசியமாகப் பேசுகிறார்கள் என்பதும் அவளுக்குத் தெரிந்தது. ஆகையால், தான் திடீரென்று தாழ்ப்பாளை நகர்த்திக் கதவைத் திறப்பதற்கு முன்பு இடைவெளியால் தனது பார்வையை வெளியில் செலுத்தி, அங்கே இருந்தவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் தோன்றியது. ஆகையால், அந்த மடவன்னம் கதவுகளின் இடைவெளியால் வெளிப்பக்கத்தை நோக்க, அவளது ஆச்சரியமும் திகைப்பும் அளவிலடங்காதவனாக இருந்தன. அவள் தனது கண்களையே நம்பாமல் பிரமித்துத் தான் கண்டது கனவோ நினைவோ என மயங்கிக் கலங்கிக் குழப்பமே வடிவாக ஸ்தம்பித்து நின்றாள். வெளிப் பக்கத்துத் திண்ணையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நமது பண்டாரம் ஒரு கம்பத்தின் பக்கமாக உட்கார்ந்து அதில் சாய்ந்து திண்ணையின்மேல் தமது காலை நீட்டிவிட்டபடி உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரில் சிறிது தூரத்தில் ஐந்து முரட்டு மனிதர்கள் அடக்கமாக வும் மரியாதையாகவும் உட்கார்ந்து கையில் மிட்டாய் தினுசுகளை வைத்துத் தின்றுகொண்டிருந்தனர். ஷண்முகவடிவு தனக்காகவும் தனது அத்தைக்காகவும் வாங்கி வைத்திருந்த