பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பூர்ணசந்திரோதயம்-1 ஆடைகளும் மற்ற சாமான்களும் அவளிடத்திலிருந்து எந்த நிலைமையில் அபகரிக்கப்பட்டனவோ அதே நிலைமையில் திண்ணையின் மீது வைக்கப்பட்டிருந்தன. அவளிடத்திலிருந்து பிடுங்கப்பட்ட பணம் ஐந்து சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரில் வைக்கப்பட்டிருந்தது. கள்கடைக்குப் பக்கத்தில் தன்னை மறித்து வளைத்துக்கொண்டு தனது பொருட்களையெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு ஒடிய ஐந்து முரடர்களே அங்கே உட்கார்ந்திருந்தவர்க ளென்பதும் தான் தனது அத்தைக்காக வாங்கிக் கொண்டு வந்த மிட்டாய்ப் பொட்டலத்தைப் பிரித்து வைத்துக் கொண்டே அவர்கள் தின்கிறார்கள் என்பதும் சந்தேகமற அந்த மடமயிலுக்குத் தெரிந்தன. ஆனால், அப்போதும், அந்த நற்குணவதியின் மனது, நமது பண்டாரத்தைப் பற்றித் தவறான அபிப்பிராயம் கொள்ள இடந்தரவில்லை. பண்டாரம் தன்னை மடத்தில் இருக்கச் செய்துவிட்டுப் பெரிய பண்ணைப் பிள்ளையிடத்தில் போனவர் கொல்லைப் பக்கத்தில் அந்த முரடர் திருட்டு சொத்தைப் பங்கு போட்டுக் கொண்டதைக் கண்டு அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாரோ என்றும், பெரிய பண்ணைப் பிள்ளைக்கும் அவர்செய்தி சொல்லியனுப்பிவிட்டு அவரது வருகையை எதிர்பார்த்து அவ்வாறு உட்கார்ந்திருக்கிறாரோ என்றுமே அவளது தயாளமான மனம் முதலில் நினைத்ததன்றி, தனது பணமும் பொருட்களும் திரும்பிவந்து விடும் என்ற மனவெழுச்சியையும் கொண்டது. ஆனால், அவர் அந்த முரடர்களிடத்தில் சிநேக பாவமாக உட்கார்ந்திருந்ததும், அவர்கள் கூசாமல் அவருக்கு முன் மிட்டாயைச் சந்தோஷமாகத் தின்றுகொண்டிருந்ததும் இன்ன காரணத்தினால் என்பது அவளுக்குத் தெளிவுபடவில்லை. அந்தப் பண்டாரம் அப்படிப்பட்ட இழிவான காரியத்தில் சம்பந்தப்பட்டு இருப்பார் என்ற எண்ணமே அவளது மனதில் உண்டாகவில்லை. ஆதலால் மேற்படி சந்தேகங்கள் அவளது