பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 259 இமிறுவாள்; தத்தளிப்பாள்; அடிப்பாள்; உதைப்பாள்; தன்னால் இயன்ற உபாயம் எல்லாம் செய்வாள். ஆகையால், இவளை எப்படி வசப்படுத்துகிறது என்பது தெரியவில்லை. இதில் எனக்கு இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பயமாக இருக்கிறது. வந்தது வரட்டும் என்று நான் துணிந்து இவளைப் பலவந்தப்படுத்தி இந்த ராத்திரிக்குள் என்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு இவளை இவளுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். இங்கே பக்கத்தில் பெரிய பண்ணைப் பிள்ளையின் ஜாகை இருக்கிறது என்பதையும், இந்த மடம் அவருடையது என்பதையும், நான் இவளிடம் சொல்லி விட்டேன். நாம் செய்த வஞ்சகத்தை இவள் பெரிய பண்ணைப் பிள்ளையிடம் சொன்னால், அதன்பிறகு நான் சாமியாரென்று பெயர் வைத்துக் கொண்டு இந்த மடத்தில் இருக்க முடியாது. நான் உடனே ஊரைவிட்டு ஒடிப்போய் விட வேண்டியது தான் முடிபாகும்' என்றார். அந்த வார்த்தைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் கேட்டுக் கொண்டிருந்த பெண்மணிக்கு உடனே அரை உயிர் போய்விட்டது என்றே சொல்லவேண்டும். அப்போதும் அவள் தனது செவிகளையே நம்பாமல் திக்பிரமை கொண்டு தான் இருந்தது பூலோகத்திலோ, ஆகாயத்திலோ என்பது தெரியாது. கிருகிரென்று மயங்கிச் சுழன்று அறிவு பேதுற்ற நிலைமையில் சித்திரப் பதுமைபோலப் பேச்சு மூச்சற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள். அவளது சரீரம் சருகுபோலப் பறக்கிறது. மனம் கூண்டில் அடைப்பட்ட கிளிபோலத் தவிக்கிறது. மலைபோலப் பொங்கியெழுந்த கிலியினால், உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் வியர்வை பொங்கி வழிந்தோடுகிறது. மகா அபாயகரமான அந்த இடத்திலிருந்து தப்பிப்போய் விட வேண்டும் என்ற பேராவலினால் அவளது மெல்லிய சரீரம் துடி துடிக்கிறது. இருந்தாலும், அவர்கள் இன்னமும் என்ன பேசுகிறார்