பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பூர்ணசந்திரோதயம்-1 சக்கரவர்த்தினிபோல நிமிர்ந்து அன்னநடை நடந்து மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கி வந்தாள். பூத் தொட்டிகளும், பவழக்கொடி சம் பங்கிக் கொடி முதலியவற்றின் பந்தல்களும் கமான்களும் விநோதமான பற்பல பதுமைகளும் படங்களும் மற்ற அலங்காரப் பொருட்களும் நிரம்பி அற்புத வனப்பு வாய்ந்த அந்த மேன்மாடத்திலிருந்து கீழே இருந்த ரமணியமான பூங்காவனத்தில் அந்த மடமயிலாள் இறங்கி வந்த காட்சி, இந்திராணி புஷ்பக விமானத்தில் அமர்ந்து கீழே இறங்கிவரும் கண்கொள்ளா வசீகரக் காட்சி போல இருந்தது. எப்போதும் அவளோடுகூட இருந்து அவள் காலால் இடும் பணியைத் தலையால் நிறைவேற்றி வைப்பதற்கு ஆயத்தமாக இரு பக்கங்களிலும் இரண்டு யெளவனப்பணிப்பெண்கள்கந்தருவப் பெண்களின் வசீகரமான அழகோடு மரியாதையாகவும், அடக்க ஒடுக்கமாகவும் வந்து கொண்டிருந்தனர். அவ்வாறு மகா கம்பீரமாக வெளிப்பட்ட பூர்ணசந்திரோதயம் பூங்காவின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ாரட்டு வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொள்ள, அவளது பணிப்பெண்களும் ஏறி அவளுக்குப்பின்பக்கமாக உட்கார்ந்தனர். வண்டிக்காரன் உடனே குதிரையை ஊக்க, அது புறப்பட்டுத் தெற்கு ராஜவீதியின் வழியாகப் போய் அதன் கிழக்குக் கோடியை அடைந்து, அவ்விடத்திலிருந்து வடக்கு முகமாகக் கிளம்பி கிழக்கு ராஜவீதியின் வழியாகச் செல்லலாயிற்று. பூர்ணசந்திரோதயம் என்ற வடிவழகி, ஒவ்வொரு நாளும் மாலை ஐந்துமணிக்கு ஸாரட்டில் அமர்ந்து, தஞ்சை நகருக்கு அரை மைல் வடக்கில் உள்ள வம் புலாம் சோலைக்குப் போவது வழக்கம். அந்த இடம் இப்போது காடுபோல விகாரமான தோற்றத்தோடு இருந்தாலும், நமது கதை நிகழ்ந்த காலத்தில், அங்கே செல்லும் வடவாற்றங் கரையின் இருபுறங்களிலும் சுமார் ஒரு மைல் சதுரத்திற்கு மகா உன்னதமான ஒர் உத்தியான வனம் இருந்தது. அந்த