பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 267 அதிரமணிய அற்புதப் பூங்காவின் இடையில் சென்ற வடவாற்றிற்கு இரண்டு பக்கங்களிலும், நெடுந்துரம் வரையில் சலவைக் கற்களால் படித்துறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த ஆற்றில் எக்காலத்திலும் வற்றாமல் பளிங்குபோலத் தெளிவாக இருந்த தண்ணீர் ஒடிக் கொண்டிருந்தது அன்றி, எங்கும் தாமரை, அல்லி, நீலோற் பலம், செங்கழுநீர் முதலியவற்றின் இலைகளும் மலர்களும் நிறைந்து, அந்த இடத்தில் மிகுந்த குளிர்ச்சியையும் அழகையும் செய்து கொண்டிருந்தன. ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் தென்னை, கமுகு, மா, பலா, பன்னீர், செண்பகம், பாரிஜாதம் முதலிய இனிய தருக்கள் நிறைந்து, புஷ்பங்களையும் கனிகளையும் தேனையும் சொரிந்து, மகரந்தத்தையும் நறுமணத்தையும் அள்ளி இறைத்து, அந்த இடத்தை அதிமனோக்கியமாகச் செய்து கொண்டிருந்தன. வண்டுகளின் ரீங்காரமும், குயில், மணிப்புறா முதலியவற்றின் குதூகலமான கும்காரமும் ஒன்றுகூடி அந்த இடம் பூலோகமோ சுவர்க்கலோகமோ என்ற ஐயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அத்தகைய இன்பகரமான உத்யான வனத்திற்குள் அவ்வூர் ஜனங்கள் காலையிலும் மாலையிலும் சென்று உலாவி, விளையாடி, சந்தோஷமாக இருந்து, பொழுதைப் போக்கிவிட்டுத் திரும்புவது வழக்கம். நமது பூர்ணசந்திரோதயமும் ஒவ்வொரு நாளும் மாலை சுமார்ஐந்துமணிக்குத் தனது ஸாரட்டு வண்டியில் ஏறிக்கொண்டு வம் புலாம் சோலைக்குப் போய், வடவாற்றங் கரையின் படித்துறைமீது நடந்து, அவ்விடத்தின் அழகைக் கண்டு ஆனந்தித்து, அங்கே உண்டாகும் வாசனையான குளிர்ந்த காற்றினால் பூரித்துப் பரவசமடைந்து, அவ்விடத்தில் குதுகலமாகக் குதித்து நீந்தி ஓடி விளையாடி நீராடும் சிறுவர் சிறுமியர்களை நோக்கியவண்ணம் மெய்ம்மறந்திருந்து சாயுங்காலம் ஆறுமணிக்குத் திரும்பித் தனது மாளிகைக்கு வருவது வழக்கம். அவ்வாறு அவள் ஒவ்வொரு நாளும் மாலையில் வம்புலாம் சோலைக்குப் போகும்போது, கிழக்கு