பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பூர்ணசந்திரோதயம்-1 ஆகவே, இயற்கையிலேயே கிளிகளின் இடத்தில் அதிக வாத்சல் யம் உடையவளான பூர்ணசந்திரோதயம் அந்தக் கிளியைப் பார்த்தவுடனே அளவில் அடங்கா வியப்பும் ஆநந்தமும் அடைந்தவளாய், அதன்மேல் வைத்த பார்வையை எடுக்காமல் சிறிதுநேரம் பிரமித்து நின்றுவிட்டாள். அந்தக் கிளியை வைத்திருந்த மனிதன் யார் என்பதையாவது, எப்படிப்பட்ட தோற்ற முடையவ னென்பதையாவது அவளது மனம் அப்போது கவனிக்கவில்லை. அந்தக் கிளியைப் பார்க்கப் பார்க்க அந்தப் பூங்கோதையின் மனம் வாத்சல்யத்தினால் உருகியது. அதைத் தனது கையில் வாங்கி வைத்துக்கொண்டு முத்தமிட்டுக் கொஞ்சிக் குலாவ வேண்டும் என்ற ஓர் ஆவலும், அதன் கிரயம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கொடுத்து, அந்தக் கிளியைத் தான் வாங்கிவிட வேண்டுமென்ற அடக்கமுடியாத ஒர் அவாவும் அவளது மனதில் எழுந்து உலப்பத் தொடங்கின. அவள் உடனே அந்தக் கிளியை மிகவும் மதிப்பாகப் பார்த்து, 'ஆகாகா என்ன அழகு! என்ன அழகு! இந்தக் கிளி எவரும் பார்க்காத புதுமாதிரிக் கிளியாக இருக்கிறதே! இது எந்த தேசத்துக் கிளியப்பா இது உனக்கு எங்கே கிடைத்தது? இது விலைக்கு விற்கிறதா? ஐயோ! முகமும் உடம்பும் எவ்வளவு சொகுலாக இருக்கின்றன!' என்று தன்னை மறந்து அதிக வியப் போடு மொழிந்தாள். அதைக்கேட்ட அந்த மனிதன் மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து, 'அழகுக்கு அழகைக் கண்டுபிடிக்கும் திறன் அவசியம் இருக்கும் அல்லவா? அதனால்தான் நீங்கள் இதைப் பார்த்து இவ்வளவு தூரம் ஆச்சரியம் அடைகிறீர்கள் போலிருக்கிறது" என்று வேடிக்கையாகக் கூற, அதைக்கேட்ட பெண்பாவை திடுக்கிட்டு அப்போதுதான் அந்த மனிதனை உற்று நோக்கினாள். சாதாரணமாகக் கிளியைத் தனக்குக் காட்டிய அந்த மனிதன் அதைப் பற்றி மேலும் பேசாமல், தனது அழகைப்பற்றி மறைபொருளாகப் பேசத்துணிந்ததை உணர்ந்து, அப்படிப்பட்ட துடுக்கன் யாவன் என்பதை அறிய வேண்டும்