பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 271 என்ற விருப்பமும் ஆவலும் உண்டானது. ஆகையால், அந்த மடவரல் அந்தக் கிளியைவிட்டு அவனைப் பார்த்தாள். அவனுக்குச் சுமார் முப்பது வயதாகி இருந்ததன்றி, அவன் மெல்லிய உயரமானசரேத்தோடு பட்டிக்காட்டு முரட்டு மனிதன் போலக் காணப்பட்டான். ஆனால், அவனது முகத்தில் போக்கிரி களையும், குறும்பும், இறுமாப்பும் பூரணமாக ஜ்வலித்துக் கொண்டிருந்தன. அவனிடத்தில் தான் கம்பீரமாகவும் அலட்சியமாகவும் பேசினாலன்றி அவன் தனது இறுமாப்பை அதிகமாகக் காட்டுவான் என்று நினைத்துக் கொண்ட அந்த தோகைமயிலாள் அவனை நோக்கி, "என்னப்பா நான் ஒன்று கேட்கிறேன். நீ ஒன்று சொல்லுகிறாயே! அழகுக்குத்தான் அழகு தெரியுமென்கிறாயே. நீ அழகாக இல்லையே. உனக்கு இதன் யோக்கியதை தெரியாது என்று நாங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்கிறாயா? அப்படியானால், மற்ற பட்சிகளை எல்லாம் விட்டு, இதைப் பிடித்து வைத்துக் கொண்டு “இதன் அழகைப் பார்' என்று கொஞ்ச நேரத்துக்கு முன் நீ என்னிடத்தில் இதைக் காட்டினாயே. அது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள். அதைக்கேட்ட அந்த மனிதன் என்ன மறுமொழி சொல்வது என்பதை அறியாமல் சிறிதுநேரம் தத்தளித்தவனாய், "எல்லாம் உங்களைப் போல அழகாயிருக்கும் மனிதர் சொல்லக் கேட்டுத்தான் நான் தெரிந்து கொண்டேன். அதுபோகட்டும்; நான் அழகில்லாதவன் என்று நீங்கள் இப்போது சொன்னீர்களே? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? தாம் உயர்வான அழகுடையவன் என்ற நினைவும் செருக்கும் உங்கள் மனசில் நிறைந்திருப்பதானால் தானே உங்களுக்கு அப்படிப்பட்ட நினைவு உண்டாயிற்று' என்றான். பூர்ணசந்திரோதயம் ஆயாசமடைந்து, 'ஏதப்பா நீ? ஆரம்பத்திலிருந்தே பெரிய கலகத்துக்குத் தொடங்கி விட்டாயே; நான் இதுவரையில் பார்த்தறியாத இவ்வளவு