பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பூர்ணசந்திரோதயம்-1 அபூர்வமான கிளியைக் காட்டி என் மனசுக்கு ஆனந்தம் உண்டுபண்ணிய நீ உன்னுடைய வார்த்தைகளால், அந்த ஆனந்தத்தை யெல்லாம் ஒட்டி மனசைப் புண்படுத்துகிறாயே. முதலில் நீ சொன்ன தத்துவமே சரியானதல்ல. சாதாரணமாகப் பகுத்தறிவும், கண்பார்வையும் உள்ள எல்லாருக்கும் அழகுள்ள வஸ்து எது? அழகில்லாத விகாரமான வஸ்து எது? என்பது நன்றாக தெரியும். ஒரு வஸ்து அழகுள்ளது என்பது அழகுள்ள வர்க்குத்தான் தெரியும் என்றும், மற்றவர்க்குத் தெரியாது என்றும் நீ சொல்வது புதுமையான நியாயமாக இருக்கிறது. அப்படிப்பட்ட தப்பான எண்ணத்தை வைத்துக்கொண்டு நீ மேன்மேலும் வார்த்தைகளை அனாவசியமாக வளர்த்துக் கொண்டு போவதில் உபயோகம் என்ன? அந்த விஷயம் இவ்வளவோடு நிற்கட்டும். இந்தக் கிளியின் விஷயம் ஏதாவது சொல்ல இஷடமானால் சொல்லலாம்; இல்லாவிட்டால் உனக்குத் தொந்தரவு கொடுக்காமல் நான் போகிறேன்' என்றாள். அந்த மனிதன், "என்ன அம்மா! நீங்கள் பேசுவது கொஞ்சமும் நியாயமாக இல்லையே! நான் உங்களைப் பார்த்தவுடனே நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லி நான் உங்களை நிரம்பவும் புகழ்ச்சியாகப் பேசினேன். அதற்குச் சன்மானமாக நீங்கள் உடனே என்னைப் பார்த்து அழகில்லாதவன் என்று சொன்னீர்கள். அப்படியே இருக்கட்டும். உலகத்தில் நிரம்பவும் பணமுடைய தனிகர்கள்தானே ஏழையாய் இருப்பவரைக் காப்பாற்றுகிறார்கள். தனிகர்கள் தனிகர்களுக்கு யாசகம் கொடுப்பதில்லை அல்லவா? அதுபோல, அழகாக இருக்கிறவர்கள் தங்களுடைய அழகை அழகில்லாதவர்களுக்கு தானம் செய்து அவர்களும் அதை அனுபவித்துப் பிழைத்துப் போகும் படி செய்து காப்பாற்ற வேண்டுமேயன்றி, அவர்களைப் பார்த்து இழிவாகப் பேசி அவமதிப்பது தருமம் ஆகாது’ என்று குறும் பாகவும் இடக்காகவும் மறுமொழி கூறினான்.