பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 275 அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம், "அப்படியானால், இதை எனக்கு இனாமாகக் கொடுக்கிறதாக ஆகாது; இரவலாகக் கொடுக்கிற மாதிரி ஆகும். ஒரு பொருளை ஒருவருக்குத் தானமாகக் கொடுக்கிறது என்றால், அதன்பிறகு அந்தப் பொருளுக்கும் அதைக் கொடுக்கிறவருக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கக்கூடாது. அந்தப் பொருளை வாங்கிக் கொள்கிற வருக்கு சகலமான உரிமைகளும் ஏற்பட்டு விடவேண்டும். அதுதான் இனாமாகக் கொடுத்ததாகும். கொடுக்கப்பட்டுப்போன பொருளினிடத்தில் மறுபடி சொந்தம் பாராட்டி உரிமை கொண்டாடினால், அந்த தானத்துக்குக் கொஞ்சமும் பெருமை ஏற்படாது. அது தானத்திலும் சேர்ந்தது ஆகாது' என்றாள். அந்த மனிதன் குறும் பாகப் புன்னகை செய்து, 'நீங்கள் மகா புத்திசாலி என்று நான் கேள்வியுற்றிருக்கிறேன்; அப்படி இருந்தும் இப்படிப் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது ஒரு மனிதன் அருமையாக வளர்த்த அழகான தன்னுடைய பெண்ணை ஒரு புருஷனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்து அவளைப் புருஷனுடைய வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். அதன்பிறகு அவன் தன்னுடைய பெண்ணிடத்தில் உரிமை பாராட்டக் கூடாதென்றும், அந்தப் பெண்ணைப் பார்க்க அவன் வரக்கூடாதென்றும், அவர்களுக்கு அதன்பிறகு எவ்வித சம்பந்தமும் இல்லையென்றும் சொல்வது நியாயமாகுமா? அல்லது, தகப்பன் பெண்ணினிடத்தில் இன்னமும் வாஞ்சை வைத்திருக்கிறானே யென்றும், அடிக்கடி பெண்ணைப் பார்க்க வருகிறானேயென்றும் நினைத்து, அவன் கன்னிகாதானம் செய்யவில்ல்ை யென்றும், பெண்ணை இரவலாகக் கொடுத்து வைத்திருக்கிறான் என்றும் சொல்ல முடியுமா?" என்றான். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம், 'ஒரு தகப்பன் தன்னுடைய பெண்ணை ஒரு புருஷனுக்குக் கட்டிக்கொடுத்து, அவளைத் தன்னிடத்திலிருந்து எப்போது அனுப்பி விடுகிறானோ, அதன்பிறகு அந்தப் பெண்ணைப்பற்றிய