பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 277 தர்மமாகுமா? மகா தயாள குணமுள்ள உங்களைப் போன்ற வர்கள் அப்படிப்பட்ட அக்கிரமத்தை ஆமோதிக்கலாமா?" என்று நயமாகக் கூறினான். உடனே பூர்ணசந்திரோதயம், 'அப்படிப் பட்ட அக்கிரமத்தை நான் ஒருநாளும் செய்ய மாட்டேன். இந்தக் கிளியைப் பெற்ற தகப்பன் தாய் ஆகிய இரண்டு கிளிகளையும், நீர் இப்போதே கொண்டுவந்து கொடுத்தாலும், அது எனக்குச்சம்மதமே. தினம் ஒருதரமல்லவா பார்க்கவேண்டும் என்கிறீர்; அது போதாது. இந்தக் கிளி இதன் தாய்க்கிளி தகப்பன்கிளி ஆகிய மூன்றையும் எப்போதும் நான் ஒரே கூண்டில் வைத்து, ஒன்றைவிட்டு ஒன்றை ஒரு rணநேரம் கூடப் பிரிக்காமல் வைத்து நிரம்பவும் பட்சமாகவும் அன்பாகவும் காப்பாற்றுகிறேன். அதைப்பற்றி நீர் கொஞ்சமும் கவலை கொள்ளவே தேவையில்லை. பெற்ற தகப்பனும், தாயும் தங்களுடைய பெண்ணைப் பார்க்கக் கூடாதென்று யாராவது தடுப்பார்களா? புருஷன் சட்டப்படிதடுக்கலாமென்று சொல்ல வந்தேனேயொழிய அப்படித் தடுப்பதுதான் நியாயம் என்று நான் சொல்ல வரவில்லையே' என்றாள். அவளது தந்திரமான வார்த்தையைக்கேட்ட அந்த மனிதன் மிகவும் குழம்பி சிறிதுநேரம் தயங்கியபின், நிரம்பவும் பரிதாபகரமாகவும் இளக்கமாகவும் அவளை நோக்கி, “நான் உங்கள் விஷயத்தில் மிகுந்த அபிமானம் வைத்து அருமையான ஒரு வஸ்துவை உங்களுக்கு இனாமாகக் கொடுக்க எண்ணுகிறேன். நான் கொடுப்பதற்கு முன்பாகவே, நீங்கள் இவ்வளவு நிர்த்தாrண்யமாகப் பேசி இதை மறுபடியும் நான் கண்ணால் பார்க்கக்கூட் விடமுடியாதென்று சொல்லுகிறீர்களே. இது தர்மமாகுமா? அல்லது, உங்களுடைய கண்ணியத்துக்கு அடுத்ததாகுமா? நான் உங்களுடைய கண்ணுக்கு அழகில்லாத வனாகத் தோன்றலாம். அப்படியிருந்தாலும், நான் உங்களுடைய ஜாகைக்கு வந்து உங்களுடைய கண்ணிலே படத்தகாத அவ்வளவு விகாரமான ரூபமுடையவனாகவா இருக்கிறேன். உங்களுடைய ஜாகையில் எத்தனையோ