பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 பூர்ணசந்திரோதயம்-1 வேலைக்காரர்கள் இருக்கிறார்களே. அந்த வேலைக்காரர்களுள் ஒருவனாக என்னையும் நீங்கள் மதித்தாவது நான் அங்கே வருவதற்கு அநுமதி கொடுக்கக் கூடாதா? உங்கள் விஷயத்தில் நான் என் மனசாலும் ஒரு தவறும் செய்யவில்லை. நான் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கமாட்டீர்கள். ஆனால், நீங்கள் இன்னார் என்று இந்த ஊர் ஜனங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆகையால் எனக்கும் தெரியும். உங்கள் விஷயத்தில் என் மனசிலிருந்து வரும் மதிப்பும், பிரியமும் கணக்கிலடங்குமா இந்த சீனத்துக்கிளி என் கையில் அகப்பட்டவுடனே, இதை நான் பாதகாணிக்கையாக சமர்ப்பிக்க அருகமான மகாராணி நீங்கள்தான் என்று நான் நினைத்திருந்த சமயத்தில், இதை வாங்கிக்கொள்ள, நீங்களே இங்கே வந்துவிட்டீர்கள். அதுவே தெய்வச் செயலால் நேர்ந்த பாக்கியம் என்று நான் மதித்து எவ்வளவோ ஆனந்தம் அடைந்திருக்க, உங்களுடைய வார்த்தைகள் மகா கொடுமை யானவைகளாக இருக்கின்றன. உங்களுடைய குளிர்ந்த பார்வையால் இந்த உலகத்திலுள்ள மகா கொடிய விலங்குகளான புலி, கரடி முதலியவைகளின் ஹிருதயம் எல்லாம் ஒரு நொடியில் வெண்ணெய் போல இளகிவிடும் போல் இருக்கிறதே. அப்படியிருக்க, உங்களுடைய சொந்த மனம் மாத்திரம், இளகாப் பாறை போல இப்படிப்பட்ட இரக்கமற்ற எண்ணங்களைக் கொள்ளுகின்றனவே! வேண்டாம் நீங்கள் என்னை இப்படி அலட்சியம் செய்வது நியாயமல்ல. நான் இந்தக் கிளியை உங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன வாக்குறுதியை மீறி நடக்கப் போகிறதில்லை. இந்தக் கிளி உங்களுக்கு வேண்டியதில்லை என்று இனி நீங்கள் மறுத்தால் கூட, நான் இதை வேறே எவருக்கும் கொடுக்கப்போறதில்லை. இதற்காகதங்கத்தினால் ஒரு கூண்டு செய்து, அந்தக்கூண்டிற்குள் இதைவிட்டு, இன்றையதினம் ராத்திரியே உங்களுக்குத் தெரியாமல் உங்களுடைய ஜாகையில் கொண்டுவந்து கட்டித் தொங்கவிட்டு விடுவேன். நான் அப்படிச் செய்வதைவிட