பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 279 நீங்களே இதை நேரில் சந்தோஷமாக வாங்கிக் கொள்வதனால் எனக்கு உண்டாகும் பெருமையும் ஆனந்தமும் இல்லாமல் போகும் படி ஏன் நீங்கள் செய்ய வேண்டும். இதை உங்களிடத்தில் கொடுத்த பிறகு நான் ஒரு நாளைக்கு ஒருதரம் உங்களுடைய ஜாகைக்கு வந்து இந்த சீனத்துக் கிளியைக் கண்டு சந்தோஷமடைந்து திரும்பி வருவதில் உங்களுக்கு எவ்வித நஷ்டமாவது, கஷ்டமாவது, குறைவாவது, அவமானமாவது உண்டாகப் போகிறதில்லை. ஒருவர் நமக்குப் பிரியத்தைச் சன்மானம் செய்தால், அதற்குப் பதிலாக வெறுப்பைத் தருவது உத்தம லக்ஷணமல்ல; நீங்கள் இல்லையென்று சொல்லாமல் இந்த ஏழையைக் காப்பாற்றி அபயஸ்தம் கொடுப்பது உங்களைச் சேர்ந்த பொறுப்பு' என்று உருக்கமாகவும் தனது கண்களைச் சிமிட்டிக் கொண்டும் குறும்பாகப் பேசினான். அந்த மனிதனது மறைபொருளான வார்த்தைகளைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் தன்னிடத்தில் அவன் ஏதோ கபடமான நோக்கத்தோடு மறைத்து மறைத்துப் பேசுகிறான் என்பதை ஒரு நொடியில் கண்டுகொண்டவளாய், தனது முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு கம்பீரமாகவும் அலட்சியமாகவும் நிமிர்ந்து நின்று, "ஐயா! நான் இதுவரையில் இங்கே நின்று உம்மிடத்தில் பேசிக்கொண்டிருந்தது சுத்தப் பிசகு என்பது இப்போதுதான் தெரிகிறது. இந்தக் கிளியைக் கண்டு நான் ஆசைப்பட்டதும் தவறு என்று நினைக்கிறேன். நீர் தற்செயலாக என்னைக் கண்டு இந்தக் கிளியைக் கொடுத்தீர் என்றே நான் இதுவரையில் நினைத்தேன். இப்போது பார்த்தால், நீர் ஏதோ துஷ்ட நினைவோடு இந்தக் கிளியை வைத்துக் கொண்டு என்னுடைய வருகையை எதிர்பார்த்து இங்கே இருந்ததாகத் தெரிகிறது. உம்முடைய வார்த்தைகள் நிரம்பவும் கபடமாக இருக்கின்றன. ஆகையால், நான் இனி ஒரு நொடி நேரம் கூட இங்கே நின்று உம் மோடு பேசுவது மரியாதையல்ல. உம்முடைய கிளியை நீரே வைத்துக் கொள்ளும்; அல்லது, உம்முடைய கிளியை வாங்கிக்கொண்டு