பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 281 வேண்டாம். எனக்கு இந்த உலகத்திலேயே விரோதிகள் இல்லையாகையால், என் விஷயத்தில் எவரும் சதியாலோசனை செய்வார்கள் என்ற பயமே இல்லை. தப்பித்தவறி ஏதாவது துன்பம் நேர்ந்தால் கூட எனக்குத் தேவையான பக்கபலம் பூர்த்தியாக இருக்கிறது. நான் அந்த விஷயத்தில் உமக்குக் கொஞ்சமாவது பிரயாசை கொடுப்பேன் என்று நீர் நினைக்க வேண்டாம்' என்று மிகவும் கண்டிப்பாகப் பேசினாள். அதைக்கேட்ட அந்த மனிதன், 'அம்மா! நான் சொல்வதை நீங்கள் இவ்வளவு அலட்சியமாக மதித்து என்னைத் தூக்கி எறிந்து பேசுவது சரியல்ல; நான் யாரோ குருவிக்காரன் என்று நீங்கள் இன்னமும் நினைத்துக்கொண்டே பேசுகிறது போல இருக்கிறது. அப்படி நினைக்க வேண்டாம்; என்னுடைய உடம் பின் தோற்றம் உங்களுக்கு அவ்வளவு வசீகரமாக இல்லையென்று, என்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் போனால், அதனால் உங்களுக்குத்தான் கெடுதல் உண்டாகும். இந்த ஊர் மகா பொல்லாத ஊர். இந்த ஊரில் நல்ல அழகும் யோக்கியமும் உள்ள பெண்கள் வெளியில் வரவே பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் கோஷாவைப் போல மறைவாகவே இருப்பார்கள். நீங்களோ இந்த ஊராரின் யோக்கியதையை அறிந்துகொள்ளாமல், கள்ளம் கபடமின்றி சாதாரணமாக சுயேச்சையாய் இருக்கிறீர்கள். நீங்கள் அழகிலோ எப்பேர்ப்பட்டவருடைய மனசையும் காந்தம்போல ஒரு நிமிஷத்தில் கவர்ந்து கொள்ளக்கூடிய நிகரற்ற அதிசுந்தரம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், உங்களைக் கண்டு இந்த ஊரிலுள்ள பல துன்மார்க்கர்கள்துவிட நினைவுகொண்டு சமயம் பார்த்து அலைந்து திரிகிறார்கள். ஆகையால், நீங்கள் எப்போதும் மிகவும் எச்சரிப்பாகவே இருக்க வேண்டும்' என்றான். பூர்ணசந்திரோதயம், "அப்படிப்பட்ட பெரிய மனிதர்களுள் நீரும் ஒருவரென்பது நன்றாகத் தெரிவதால், நீர்