பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 283 நினைக்க இடமிருக்கிறது. என்னைப்பற்றி இத்தனை சங்கதிகள் தெரிந்து கொண்டிருக்கும் நீர் இப்போது முதன் முதலாக என்னைக் கண்டபோதாவது, அல்லது, அந்தப் பந்தயம் வைக்கப்பட்ட உடனே என் ஜாகைக்கு வந்தாவது, இந்த ரகசியத்தை நீர் என்னிடத்தில் சாதாரணமாக வெளியிட்டிருந்தால், நீர் யோக்கியர் என்ற நம்பிக்கை உண்டாகும். அதைவிட்டு எங்கேயோ இருந்த ஒரு கிளியைப் பிடித்து வைத்துக் கொண்டு கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பதுபோல, என்னிடத்தில் பேசி என்னை ஏமாற்றப் பார்க்கிறீரே. இந்த வித்தையெல்லாம் நீர் எங்கே கற்றுக்கொண்ட வித் தை ஒரு கிளிக்காக ஒரு பெண்பிள்ளை தன்னுடைய கற்பை இழந்துவிடுவாள் என்று நீர் நினைப்பது தான் நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் நீர் தக்க பெரிய மனிதரென்றும் சொல்லிக் கொள்ளுகிறீர். இந்த ஊரிலுள்ள பெரிய மனிதர்களெல்லாம் உம்மைப்போலத்தான் இருப்பார் களென்று தெரிந்திருந்தால், நாம் இந்த ஊரிலேயே தங்கியிருக்க மாட்டேன். இவ்வளவு சாமர்த்தியமாகக் கிளி கொடுத்துக் கொக்குப் பிடிக்கும் பெரிய மனிதராகிய நீர் இன்னார் என்பதையும் வெளியிடமாட்டேன் என்கிறீர். அதைச் சொன்னாலாவது நான் அதற்குத் தக்கபடி மரியாதையாக நடந்து கொள்ளலாம்” என்று மிகவும் அருவருப்பாகப் பேசினாள். அதைக் கேட்ட அந்த மனிதன் தனது பொறுமையை இழந்து, மிகுந்த கோபமடைந்தவனாகப் பதறி, "ஆகா! நானும் ஆரம்பத்திலிருந்து உன்னோடு பேசிக்கொண்டு வருகிறேன். உன்னுடைய இறுமாப்பும் எடுப்பும் மனிதன் சகிக்கக்கூடிய வரம்பை மீறியவையாக இருக்கின்றனவே முதலில் தான் யாரோ குருவிக்காரனென்று என்னை அலட்சியமாக மதித்துப் பேசினாய். இப்போது நான் தக்க பெரிய மனிதனென்று சொல்லுகிறேன். இப்போதும், நீ கொஞ்சமாவது மரியாதை வைக்காமல் தூக்கி எறிந்து பேசுகிறாயே. இந்த ஊரில் என்னைத்