பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 287 மாத்திரம் இல்லாமல் வேறே யாராக இருந்தாலும் அவள் படுகிற பாடு இந்நேரம் தெரிந்திருக்கும். இதே இடத்தில் உன்னை இப்போது நான் பலவந்தமாகப் பிடித்து மானபங்கம் படுத்தும் திறன் எனக்குப் பூரணமாக உண்டு. நூறு மனிதர் உனக்குப் பக்கபலமாக இங்கே வந்து உன்னை விடுவிக்க யத்தனிப்பதானாலும் அவர்கள் எல்லோரையும் ஒரு நொடியில் நான் தவிடு பொடியாக்கிவிடுவேன். நீ ஒரு பெரிய மனுவி யென்று முகத்தை வைத்துக்கொண்டு அந்த ஜெகன் மோகனை விலாசத்து உப்பரிக்கையின்மேல் நின்று இனி இந்த ஊராரை மயக்க முடியாதபடி உன்னை இன்றோடு சரிப்படுத்தி அனுப்பி விடுவேன். ஆனால், நீதான் அறியாமையினால் ஏதோ இப்படி நடந்துவிட்டாயென்றால், அதற்காக நானும் உன்னிடத்தில் கடுமை காட்டுவது அழகல்ல. அதோடு எனக்கு உன்னிடத்தில் ஏற்பட்டிருக்கும் பிரியத்துக்கும், அந்தரங்கமான ஆசைக்கும் அளவு சொல்ல முடியாது. அதனால்தான், நீ என்னை எவ்வளவு தூரம் இழிவாகப் பேசினாலும், நான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதை நீ தெரிந்து கொள்ளாமல் உனக்குத்தான் பேசத் தெரியும் என்று வார்த்தைகளை ஒட்டுகிறாயே! உனக்கு என்னுடைய சிநேகம் வேண்டுமா, அல்லது என்னுடைய பகைமை வேண்டுமா என்று நான் கேட்டதற்கு சரியானபடி மறுமொழி சொல்லாமல் ஒடுகிறாயே! அப்படி ஒடிவிட்டால், நான் உன்னை இவ்வள வோடு மறந்து விட்டுப்போய் விடுவேன் என்று நினைத்துக் கொண்டாயா? அது ஒரு நாளும் பலிக்காது. இரண்டிலொன்றாக நாம் இருந்து தீர வேண்டும். என்ன சொல்லுகிறாய்? உனக்கு எதில் இஷ்டம்? சொல்லிவிடு!” என்று கண்டிப்பாகக்கூறினான். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் மிகவும் பதைபதைத்த வளாய் நிரம்பவும் கம்பீரமாக நிமிர்ந்து நின்று, 'உம்மோடு சிநேகமாக இருப்பதென்றால், அது இன்னதென்று எனக்குச் சரியாக விளங்கவில்லை. அதைக் கொஞ்சம் விவரித்துச் சொல்லும் என்றாள்.