பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 289 எவனும் நாடாமல் அடித்து விடுவேன் என்பதை நீ நிச்சயமாக வைத்துக்கொள்!" என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறினான். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம், 'உம்முடைய பகைமைக்கு இவ்வளவு அர்த்தமிருக்கிறதா? இருக்கட்டும். நான் உம்முடைய சிநேகத்தையும் நாடவில்லை; உம்முடைய பகைமையையும் நாடவில்லை. நீராக வந்து, எதற்காக வற்புறுத்தி இரண்டிலொன்றை ஏற்படுத்திக் கொள்ளப் பார்க்கிறீர். நீர் என்னைப் பார்த்து ஆசைப்படுகிறீர் என்கிற காரணத்தினால், உம்மிடத்தில் சிநேகமாகவாவது விரோதமாக வாவது இருக்கவேண்டுமென்பது கட்டாயம் இல்லை. ஆகையால், வீணாக துன்மார்க்கத்தில் இறங்கித் துன்பத்தை விலைக்கு வாங்கவேண்டாம்; போய் விட்டு வாரும்; நமஸ்காரம் ' என்று கூறியவண்ணம் விசையாக அப்பால் நடக்க, பக்கத்திலிருந்த ஒரு புதரின் மறைவிலிருந்தபடி நமது பஞ்சண்ணாராவ் கனைத்துக் கொண்டு, “யாரைய்யா அது சண்டை போட்டுக் கொள்ளுகிறது? பகலில் பக்கம் பார்த்துப் பேசுங்கள். அப்புறம் இப்புறம் மனிதர்கள் இருக்கிறார்கள்' என்று கூறிய வண்ணம் வெளிப்பட்டான். 13 - வது அதிகாரம் வியாழக்கிழமை - நான்காவது வலை அவ்வாறு திடீரென்று வெளிப்பட்ட பஞ்சண்ணாராவைக் கண்டவுடனே சூரக்கோட்டைப் பாளையக்காரர் திடுக்கிட்டு, வந்தது யாரென்பதைக் கவனித்ததன்றி, பக்கத்தில் இன்னமும் வேறே மனிதர்கள் யாராகிலும் இருக்கிறார்களோ என்று நாற்புறங்களிலும் திரும்பிப் பார்த்தார். ஆதலால், அதற்குள் பூர்ணசந்திரோதயம் விரைவாக நடந்து நெடுந்துரத்திற்கு அப்பால் போய்விட்டாள். மேலும் தாம் அவளைத் பூ.ச.1-20