பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 13 நேர்ந்துவிட்டதே என்ற கவலையும் துயரமும் அவளைக் கலக்கினவாதலால், அவளது கண்கள் கண்ணிரை ஒடவிட்டுக் கொண்டே இருந்தன. அவளோடுகூட வண்டியிலிருந்த சகப்பிரயாணிகள் யாவரும் அவளது பரிதாபகரமான நிலைமை யைக் கண்டு இரங்கி அவளைத் தேற்ற ஆரம்பித்தனர். வேறு சிலர் தஞ்சைபுரியிலுள்ள அதிசயக் காட்சிகளைப் பற்றி விரிவாகப் பேசப்பேச, கமலத்தின் கவனம் அந்த விஷயங்களில் சென்றமையால், அவளது விசனம் குறைந்து கொண்டே வந்தது. அன்றைய பகல் முழுவதும் தபால் வண்டிகள் பிரயாணம் செய்தன. இடையிடையே இருந்த ஊர்களில் வண்டி சிறிது நிறுத்தப்பட்டதனால், அந்தப் பிரயாணிகள் இடைவழியில் காணப்பட்ட சத்திரங்களில் இறங்கித் தங்களது போஜனத்தை முடித்துக்கொண்டனர். எவ்வித விசேஷ சம்பவமுமின்றி அந்தத் தபால் வண்டிகள் இரவு ஒன்பது மணிக்குத் தஞ்சையை அடைந்தன. மற்றப் பிரயாணிகளுள் சிலர் அங்கே காணப் பட்ட ஒரு சத்திரத்தில் இறங்கினராதலால், அவர்களோடு பழக்கம் செய்துகொண்ட கமலமும் அவ்விடத்திலேயே இறங்கி, தான் கொணர்ந்திருந்த ஆகாரத்தை உண்டுவிட்டு அவ்விடத்திலேயே படுத்து அன்றைய இரவைப் போக்கி மறுநாள் விழித் தெழுந்தாள். எழுந்தவள் தனது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு பக்கத்திலிருந்த அன்னசாலையிலிருந்து ஆகாரம் தருவித்து உண்டபின், மேற்கு ராஜவீதிக்குப் போவதற்கு ஒரு வண்டியமர்த்தி, அதற்குள் உட்கார்ந்துகொண்டு புறப்பட்டாள். அந்த வீதியில் 20வது இலக்கமுள்ள வீட்டிலிருக்கும் சோமசுந்தரம் பிள்ளை என்பவரிடத்திற்குத் தன்னைக் கொண்டு போய் விடவேண்டு மென்று அவள் தெரிவிக்கவே, வண்டிக் காரன் அவ்வாறே வண்டியை ஒட்டிக்கொண்டு போனான். எங்கு பார்த்தாலும் அகழியும், அலங்கங்களும், ஏழு உப்பரிக்கை களைக் கொண்ட அரண்மனையும், மாடங்களும், ஆகாயத்தை அளாவிய கோபுரங்களைக் கொண்ட கோவில்களும், வேறு பலவிதமான அணிகளும் நிறைந்து காணப்பட்டு, காண்போர்