பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. ತುಣ್ಣರಳ್ಗಡಿ ஐயங்கள் 295 நொடி திடுக்கிட்டது. அவளதும்னது நெகிழ்ந்து உருகிக் கொண்டே இருந்தமையால், கருவண்டுகளைப் பழித்த அவளது ஏந்தெழில் விழிகள் இரண்டும் தண்ணீரில் மிதக்கும் தெப்பங்கள் போல மிதந்து ஜ்வலித்தன. அவளது வயிறு ஆனந்த மயமாக நிறைந்திருந்தமையால், அன்று முழுதும் பசி தாகம் முதலிய எவ்வித தேகபாதையும் அந்தப் பூங்கொம்பை வருத்தியதாகவே தோன்றவில்லை. மற்ற நாட்களில் அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டதை எல்லாம் விட அன்றையதினம் பதினாயிரம் மடங்கு விசேஷமாக அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். அவளிடத்திலிருந்த ஆடையாபரணங்கள் எல்லாவற்றிலும் மேலானவைகளையும் விலைமதிப்பற்றவைகளையும் தேர்ந்தெடுத்து அந்த மின்னாள் அன்றையதினம் அணிந்து கொண்டாள். ஆதலால், உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் வெல் வெட்டும், பட்டும், ஜரிகையும், வைரங்களும், முத்துமாலை களுமே மயமாக நிறைந்து, கலியாணப் பந்தலில் உட்கார ஆயத்தமாக இருக்கும் யெளவன ராஜகுமாரி போல மகா ஜாஜ்வல்லியமான வனப்போடு ஒரே இன்பமயமாகவும் வசீகரமாகவும் காணப்பட்டாள். ரோஜா, ஜாதிமல்லிகை முதலிய புஷ்பங்கள் நிறைந்த அவளது கூந்தல், அழகாகப் பின்னப்பட்டு அவளது கணைக்கால் வரையில் தொங்கி அவளது பின்னழகைக் கண்கொள்ளா வசீகரக்காட்சியாகச் செய்தது. இயற்கை அழகும், செயற்கை அலங்காரமும் ஒன்றுகூடி அந்த மடமயிலைக் காண்போர் எப்படிப்பட்டவரானாலும் மட்டுக்கடங்கா வியப்பும் பிரமிப்பும் அடைந்து, "ஆகா! இவள் தெய்வலோகத்திலிருந்து இப்போதே வந்து இறங்கிய அப்சர ஸ்திரீயோ!' என்று மயங்கிக் கலங்கச் செய்தன. என்றைக்கும் இல்லாத புதிய அலங்காரத்தோடு அன்றைய தினம் காணப்பட்ட பூர்ணசந்திரோதயம் தனது மனத்தில் எழுந்து பொங்கிய அமிர்த ஊற்றைத் தானே பருகி அபரிமிதமான முகக்களையும் ஜ்வலிப்பும் புதிய அழகும்