பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பூர்ணசந்திரோதயம்-1 மேனியும் பெற்று, மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரம் போல் விளங்கினாள். அவளது மனதும் ஓயாமல் சலனம் அடைந்து கொண்டிருந்தமையால், அதற்கிணங்க அவளது ஏந்தெழில் மேனியும் இருக்கை கொள்ளாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவள் லோபாவில் உட்கார்ந்து பார்ப்பாள், நாற்காலியில் சாய்ந்து கொள்வாள், எழுந்து சிறிதுநேரம் உலாவுவாள், பிறகு தனது சப்பிரமஞ்சத்தில் சயனித்துக் கொள்வாள், உடனே திடுக்கிட்டு எழுந்திருந்து நிலைக் கண்ணாடிக்கு எதிரில் போய் நின்று தனது வடிவழகைத் தணிக்கைசெய்து ஒவ்வோர் அலங்காரத்தையும் சீர்திருத்திக் கொண்டு நிகரற்ற தனது சுந்தரத்தைக் கண்டு பூரித்துப் புளகிதமெய்தித்தனக்குத்தானே மோகித்து மதிமயங்கி பிரமித்து நிற்பாள். எங்கேயாவது காலடியோசை கேட்டால், அவள் திடுக்கிட்டுத் தன்னிடத்தில் யாராவது வேலைக்காரர் ஏதாகிலும் செய்தி சொல்ல வருகிறார்களோ என்று நினைத்து சுற்று முற்றும் பார்ப்பாள். ராஜபாட்டையில் தடதடவென்று ஏதாவது வண்டி வந்த ஓசை உண்டானால், அவள் மான்போல மருண்டு நிமிர்ந்து நின்று ஒசை உண்டான பக்கத்தில் தனது பார்வையைச் செலுத்தி, அந்த வண்டி நெடுந்துாரம் போய் மறைந்துபோகிற வரையில் அப்படியே நின்று பிறகு உட்கார்ந்து கொள்ளுவாள். அவள் அடிக்கடி கிளிக் கூண்டுகளின் பக்கமாக நடந்தபோதெல்லாம் அவைகளுக்குள் இருந்த பஞ்சவர்ணக் கிளிகள் முதலிய அவளது பிரான சிநேகிதர்கள் அவளது புதுமையான தோற்றத்தைக் கண்டு ஆதங்கம் கொண்டு ஆடிப் பாடிக் கொஞ்சிக் குலாவி அவளிடத்தில் வந்துவிட வேண்டும் என்று துடிதுடித்து அரும்பாடுபட்டுக் கம்பிகளில் முட்டி மோதிக் கொள்ளும். ஆனால், அந்த இளந்தோகையின் மனம் அன்றைய தினம் அவைகளின்மீது நாடவில்லை. ஆகையால், அவள் அவைகளை அவ்வளவாக இலட்சியம் செய்யாமலே அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தாள். அவள் சென்ற இடத்திலிருந்த கொடிகளில் மலர்ந்து அவளைக்