பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 297 கண்டு நகைத்து ஆனந்தத் தாண்டவம் ஆடிய சம் பங்கி, ரோஜா, ஜாதிமல்லிகை முதலிய நறுமலர்களெல்லாம் அவளது மிருதுவான கரங்களால் தீண்டப்படும் பாக்கியம் பெறாமையால் குழைந்து வாடித்தத்தளிப்பன போலக் காற்றில் அசைந்துக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட நிலைமையில், அந்த மடவன்னம் சலனமடைந்து தளர்வுற்று மஞ்சத்தில் சயனித்திருக்க, பிற்பகல் ஐந்துமணிசமயமாயிற்று. அவளுக்கு எதிரில் ஒருவேலைக்காரி வந்து பணிவாக நின்று, "அம்மணிவாசலில் ஒரு பெட்டிவண்டி வந்து நிற்கிறது. இந்த ஊர் மகாராஜாவுக்குச் சொந்தமான ஓர் அம்மாள் அந்த வண்டிக்குள் வந்திருக்கிறார்களாம். அவர்களுடைய சொந்த ஊர் தார்வார் தேசமாம். தாங்கள் தார்வார் தேசத்து மகாராஜாவின் அபிமான புத்திரி என்ற சங்கதியை அவர்கள் கேள்வியுற்றார்களாம்; அதுமுதல் தங்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையாம் ; அதற்காக வந்திருக்கிறார்களாம்; உள்ளே சமயம் சரியா யிருக்கிறதா வென்று பார்த்துவிட்டு வரச்சொல்வதாக, அந்த அம்மாளுடைய தாதி சொன்னாள். அவளை வாசலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு நான் உள்ளே ஓடிவந்தேன்” என்றாள். அவள் சொன்ன செய்தியைக்கேட்ட பூர்ணசந்திரோதயம் திடுக்கிட்டு எழுந்தாள். அவளது முகம் முற்றிலும் மாறுபட்டது. நான் ஒரு மனிதரது வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்க, முகமறியாத யாரோ ஒரு ஸ்திரீ தன்னைக் காண வந்திருப்பதைக் கேட்டு, அவள் கரைகடந்த வியப்பும் சஞ்சலமும் அடைந்தவளாய், தான் என்ன மறுமொழி சொல்வது என்பதை அறியாமல் இரண்டொரு நிமஷநேரம் தத்தளித்தாள். அந்த ஊர் மகாராஜாவுக்குச் சொந்தமான அந்தப் பெரிய இடத்துப் பெண் பிள்ளை தன்னை அவர்களது இருப்பிடத்திற்கு வரவழைக்கக் கூடிய அதிகாரமும் செல்வாக்கும் படைத்திருந்தும், தன்னை ஒரு பொருட்டாக