பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பூர்ணசந்திரோதயம்-1 ஜரிகை வேலைப்பாடுகளும், நவரத்னமணிகளும் நிறைந்தி ருந்தன. விலை உயர்ந்த பகட்டான அந்த அங்கிக்குள் மறைந்திருந்த ஸ்திரீ நன்றாகத் தடித்து உயர்ந்து செழுமையும் தளிர்ப்பையும் கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடனேயே மற்ற எல்லோரும் ஒருவித பயபக்தி யும் மரியாதையும் பணிவும் காட்டும்படி, அது அவ்வளவு கம்பீரமாகக் காணப்பட்டது. ஆனால், அந்த அங்கிக்குள் மறைந்துவந்த சீமாட்டி அம்மாளது நடை தளர் நடையாகவும் பிடியானையின் நடைபோலவும் இருந்தது. அவ்வாறு வந்த பெருமாட்டியைக் கண்ட பூர்ணசந்தி ரோதயம் திடுக் கிட்டு அவள் மகாராஜாவின் நெருங்கிய உறவினளாக இருக்கவேண்டும் என்று யூகித்துக் கொண்டு, அப்படிப்பட்ட பெரிய இடத்து ஸ்திரீதன்னை ஒரு பொருட்டாக மதித்து அவ்வளவுதூரம் வந்ததைக் குறித்து மிகுந்த வியப்பும், கரைகடந்த களிப்பும் கொண்டவளாய், மிகவும் பணிவாகவும் அந்தரங்க அன்போடும் பேசத் தொடங்கி, 'வரவேண்டும் வரவேண்டும்” என்று உபசரித்து அவளை வரவேற்க, அந்தப் பெருமாட்டி தனது தலையசைப்பால் அவளது மரியாதையை ஏற்றுக்கொண்டு, 'வருகிறேன்' என்று மிருதுவாக மறுமொழி கூறியவளாய் உள்ளே நுழைந்தாள். தாதிகள் இருவரும் வெளியிலேயே நின்றுவிட்டதன்றி, அந்தப் பெருமாட்டி தனது அங்கியை ஒருகால் விலக்க நேரும் என்றும், அப்போது வேறே மனிதர் யாராவது வெளியிலிருந்து உள்ளே பார்த்தால், அவளது நிஜவடிவம் பிறரது திருஷ்டியில் படும் என்று நினைத்து முன் ஜாக்கிரதையாக வெளிக்கதவை மூடி வைப்பது வழக்கம். அந்த ஏற்பாட்டின்படி மேற்படிதாதிகள் மேன்மாடக் கதவை மூடிக்கொண்டு வெளிப்பக்கத்திலிருந்த தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டனர். உட்புறத்தில் பூர்ணசந்திரோதயம் அங்கியால் மூடிக் கொண்டு வந்திருந்த பெருமாட்டியைப் பணிவாகவும் மரியாதையாகவும் நடத்தி அழைத்துக் கொண்டுபோய் மகமல் மெத்தை தைக்கப்பட்டு மிகவும்