பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 - - பூர்ணசந்திரோதயம்-1 அதேமாதிரி நினைத்து நீங்கள் சொன்ன வார்த்தைகளையே சொல்ல நினைத்தேன். அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டீர்கள். ஆனால், நீங்கள்சொன்ன விஷயங்களில் ஒன்றை மாத்திரம் நான் ஒப்புக்கொள்ள முடியாது. எங்களைப் போன்ற பெரிய இடத்து பாஸிஸாயேப்புகளுடைய தரிசனம் உங்களைப் போன்ற சாதாரண ஜனங்களுக்குக் கிடைப்பது அரிதென்று நீங்கள் நினைப்பது சரியல்ல. உங்களுடைய சிலாக்கியமான அழகையும், அமைப்பையும், புத்தி விசேஷத்தையும், குண மேம்பாட்டையும், நடத்தை அழகையும் பார்த்தால், இந்த உலகத்தை எல்லாம் ஏக சக்கராதிபதியாக ஆளும் மண்டலேசுவரனும் வணங்கி வழிபடத் தகுந்த அவனுடைய பட்டத்துராணி உங்களுடைய காலில் ஒட்டிய ஒரு தூசிக்கும் இணையாக மாட்டாள் என்று நான் துணிந்து சொல்லுவேன். மகாராஜனுடைய பெண்பிள்ளைகள் அரண்மனையின் ஏழாவது உப்பரிக்கையில் இருக்கலாம்; கோடி சூரியப் பிரகாசமான ஆடையாபரணங்களை வாரி உடம்பு முழுதும் நிறைத்துக் கொண்டிருக்கலாம்; பனாரீஸ் பட்டுகளால் ஆன அங்கிகளால் தங்களை மறைத்துக்கொண்டு பிறர் தங்களைப் பார்க்காமல் தங்களுடைய உடம்பை ஒளித்துக் கொண்டிருக்கலாம். அதனாலேயே அவர்கள் எல்லோரும் கட்டழகும், குணத்தழகும், மற்ற உத்தம லக்ஷனங்களும் பொருந்தியவர்கள் என்றும், மற்ற மனிதர்களைவிட மேம்பட்டவர்கள் என்றும் நாம் நினைத்து விடலாமா? அப்படி நினைப்பது சரியல்ல. உலகத்தில் வெறுங்கையை ஒருவன் மூடி வைத்துக் கொண்டிருந்தாலும், அதற்குள் ஏதோ அருமையான வஸ்து இருப்பதாக நினைத்து, அது என்ன என்பதை அறிய ஆவலும் ஆசையும் கொள்வது உலக இயற்கை. அதுபோலவே, பூடகமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிற எந்த வஸ்து விடத்திலும் மனிதருக்குப் பிரேமையும், வேட்கையும் அதிகம். அதுபோல நாங்கள் எங்களுடைய உடம்பை வெளியில் காட்டாமல் அங்கியாலும், துப் பட்டியாலும் மறைத்து