பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பூர்ணிசந்திரோதயம்-1 பிரமிக்கும்படி இருந்தன. அப்படிப் பட்ட அற்புதக் காட்சிகளை யெல்லாம் கடந்து, அந்த வண்டி எண்ணிறந்த தெருக்களையும், சந்து பொந்துகளையும் தாண்டிச் சென்றது. தஞ்சையைப்பற்றி ஜனங்கள் பேசிக்கொள்வதெல்லாம் உண்மையான விவரங்கள் என்பதைக் கண்ணாரப் பார்த்துக் களிகொண்டு சென்ற கமலம், இடையிடையே தனது அத்தை, தங்கை, தனது சொந்த ஊர் முதலியவற்றை நினைத்துப் பெருமூச்செறிந்தாள். கடைசியில் வண்டி மேற்கு ராஜவீதியை அடைந்து 20வது இலக்கமுள்ள வீட்டின் வாசலில் போய் நின்றது. அந்த ஜாகை, நான்கு உப்பரிக்கைகளையும், முன்பக்கத்தில் தோட்டத்தையும் கொண்ட மகா உன்னதமான ஒரு மாளிகையாக இருந்தது. கமலம் வண்டியைவிட்டுக் கீழே இறங்கி நின்றாள். வண்டிக் காரன், அந்த மாளிகையின் முன்புற வாசற்கதவை மெதுவாக இடிக்க, உடனே ஒரு சேவகன்வந்து கதவைத் திறந்தான். அவன் தலைப்பாகை, அங்கி, வெள்ளியில்லை, டாலிடவாலி முதலிய வைகளை அணிந்து யாரோ பெருத்த அதிகாரியின் டலாயத்து போலக் காணப்பட்டான். ஆனால், கமலம் கேட்டதற்கு அவன் சொன்ன மறுமொழி, பெருத்த திகைப்பையும், வியப்பையும், கவலையையும் உண்டாக்கின. அந்த வீட்டில் சோமசுந்தரம் பிள்ளையென்ற பெயருடைய மனிதர் எவருமில்லை என்றும், அந்த மாளிகை பவானியம்பாள்புரத்து ஜெமீந்தாரது வாசஸ்தலமென்றும் அந்தச் சேவகன் கூறியதைக் கேட்ட கமலம், அந்த வீட்டின் கதவிலக்கத்தை இன்னொருமுறை ஆராய்ந்து பார்க்க, 20-என்ற இலக்கமே கதவில் காணப்பட்டது. அது சரியான இலக்கம் என்று சேவகனும் ஒப்புக் கொண்டான். உடனேகமலம் தனது மூட்டையை அவிழ்த்து அதற்குள்ளிருந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்தாள். தஞ்சையிலிருந்த பாங்கியின் தலைவரால் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த விலாசத்தை அவள் இன்னொரு முறை கவனித்து நோக்க, அதிலும் அதே விலாசம் சந்தேகமறக் காணப்பட்டது. அவள் என்ன செய்வதென்பதை அறியாதவளாய்த் தயங்கித் தவித்தாள்.