பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காள் 305 அந்தப் பெருமாட்டி மகிழ்ச்சியும் புன்னகையும் மடைந்தவளாய், "நீங்கள் சொல்வது நிஜந்தான். ஆனால், அதில் ஒரு விஷயம் இருக்கிறது. ராஜவம்சத்தில் பிறந்த பெண் ஒரு மகாராஜனைக் கலியாணம் செய்துகொள்வது சுலபந்தான்; அதோடு அவளுக்கு மற்ற ஜனங்களுடைய பூஜிதையும் ஏற்படுமென்று நிச்சயம். ஆனால், அதனாலேயே அவளுக்கு உண்மையான ஆனந்தமும், மனத்திருப்தியாகிய நிகரற்ற செல்வமும் ஏற்பட்டுவிடுமா? ஒரு மகாராஜன்தான்கலியாணம் செய்துகொள்ளும் எல்லாப் பட்டமகிஷிகளிடத்திலும் நீடித்த பிரியம் வைக்கிறது சந்தேகமே; அவளிடத்தில் அபாரமான அழகும் சகலமான உத்தம லட்சணங்களும் இருந்தால்தான் அந்த ராஜனுக்கு அவளிடத்தில் வேரூன்றிய உண்மைக் காதலும் பிரேமையும் மன உறுதியும் ஏற்படுமேயன்றி, அவள் குரூபியாகவோ, குணக்கேடியாகவோ இருந்தால் அவன் அவளை ஒரு மூலையில் ஒதுக்கித் தள்ளிவிட்டு, தன் மனசுக்கு உகந்த லட்சணங்கள் வாய்ந்த ஸ்திரீயை நாடிச் செல்கிறான். ஆனால் அவளுக்கு ஆடையாபரணங்கள், சுகபோஜனம் முதலிய சகலமான சம்பத்தும் செளகரியமும் ஏராளமாகக் கிடைக்குமென்ற ஒரு விஷயம் மாத்திரம் நிச்சயந்தான்; அது மாத்திரம் போதுமா? பெண்களுக்கு மற்ற எல்லா சம்பத்தைக் காட்டிலும், புருஷனுடைய அந்தரங்கமான வாஞ்சை, பிரேமை ஆகிய இரண்டுமே நிகரற்ற பாக்கியங்கள். அது இருந்தால் மாத்திரம் ஸ்திரீகள் ஆனந்தமாகவும் மனத் திருப்தியோடும் சந்தோஷமாக இருக்கலாமேயன்றி, புருஷன் நீங்கலாக மற்ற செல்வங்கள் எவ்வளவு நிரம்பி இருந்தாலும், அது உண்மையான வாழ்க்கையாகாது. ஆகையால், ராஜகுலத்தில் பிறந்து ராஜனுக்குப் பட்டமகிஷியாக இருந்து, அவனுடைய உண்மையான காதலுக்குப் பாத்திரப் படாமல் இரவு பகல் அழுது வயிறெரிந்துகொண்டு மூலையில் படுத்துக் கொண்டிருப்பதைவிட கேவலம் ஒருதாசி வயிற்றில் பிறந்து மகாராஜனுக்கு ஆசைநாயகியாக இருந்து, சதாகாலமும் அந்த பூ.ச.:-21